Header Ads



பதில் பிரதம நீதியரசரை உடனடியாக நியமியுங்கள் - அவசரப்படுத்துகிறார் விமல்

(அஷ்ரப் ஏ. சமத்)

பதில் பிரதம ஒருவரை உடனடியாக நியமிக்கும்படி எனது கட்சியான தேசிய சுதந்திர முன்ணனி ஜனாதிபதியை கேட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவனச்ச தெரிவித்தார்.

இன்று (3) பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்ணனி கட்சி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் மேற்கண்டடவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.  அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது,,

பிரதம நீதிபதி சிரிராணி பண்டாரநாயக்க எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரை நீக்கும் வரை ஐனாதிபதிக்கு பதில் பிரதம நீதிபதியொருவரை நியமிக்க முடியும். அதற்கான சட்ட திட்டங்கள் உள்ளன.

இன்று உலகில் நீதிமன்றங்களை விட  மக்களால் தெரிபுசெய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. அதுவும் இப் பாராளுமன்றம் 3-2 பங்கு உறுப்பினர்களைக் கொண்ட பலமான பாராளுமன்றமாகும். பிரதம நீதியரசர் முனைவதெல்லாம் ஜெனிவாவில் நடைபெறுக்கின்ற மணித உரிமை மகாநாட்டில் இலங்கை சார்பாக சாட்சிக்கரியாக செல்வதற்கே அவர் முயற்சிக்கின்றார்.

இச் சர்ந்தர்ப்பத்தில் ஐ.தே.கட்சித் தலைவர் ஒரு சட்டத்தரணி இவ் விடயம் சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு சென்றால் எதிர்காலத்தில் அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆட்சியும் நீதிமன்றம் சொல்லுகின்ற படியே செயற்பவேண்டி ஏற்படும் என அவருக்கு தெரியும்.

ஆனால் இரா சம்பந்தன் போன்றோர்கள் கிளிநொச்சியில் பாராளுமன்றத்தை உறுவாக்க நினைத்தவர் அவருக்கு மத்திய பாராளுமன்றம் அதிகாரம் பற்றி கரிசனைகிடையாது மற்றும் ஜே.வி.பியும் ஆட்சி அமைக்க முடியாது. இலங்கையில் நீதி, சட்டம் ஒழுங்கில் சில தனி நபர்களது விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாக நீதித்துறை செயல்படுகின்றது. இந்த நாட்டில் நடைபெற்ற கொடூர யுத்தத்தினை வென்றெடுத்த பாதுகாப்புப் படையினர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி அதற்காக ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவே இந்த நாட்டில் உள்ள சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களின் வலையில் பிரதம நீதியரசரும் விழுந்துள்ளார். 

சிராணி பண்டாரநயாக்கவுக்கு பின்னால் பாக்கியசோதி சரவணமுத்து  தமிழர் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரம்  சம்பந்ன் மற்றும் வெலியமுன ஜே.வி.பி அனுரகுமர திசாநாயக்க போன்றோர் அவர்களுக்கு பின்னால் நிற்கின்றனர். 

பிரதம நீதியரசர் பதவியில் சிராணி பண்டாரநாயக்க இருக்கும் வரை அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் கொண்டுபோகும் வழக்குகள் அவருக்கு சார்பாகவே தீர்ப்புக்கள் இருக்கும். அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிபதிகள் அவர் சொல்வதையே கேட்பார்கள். என அமைச்ர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.    

No comments

Powered by Blogger.