தெஹியத்தகண்டியில் உதுமாலெப்பையின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை
(இர்பான் வதூத் + ரீ.கே. றகுமத்துள்ளா)
கிழக்கு மாகாண மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கண்டறியும் முகமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நடமாடும் சேவை நடாத்தப்பட்டுவருகின்றது.
இதற்கமைய தெஹியத்தகண்டி பிரதேச அமைப்பாளர் ஏ.எம். பிரியந்த அபேசேகரவின் வேண்டுதலின்பேரில் அமைச்சினால் நடாத்தப்பட்ட இரண்டாவது நடமாடும் சேவை இன்று 06.01.2013 காலை 9.00 மணியளவில் தெஹியத்த கண்டி சாலிக்கா மண்டபத்தில் ஆரம்பமானது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் உதவிச்செயலாளர் எம்.ஐ. சலாஹூதீன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ். ஜஹாங்கீர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் தத்தமது குறைகளையும் வேண்டுதல்களையும் முன்வைத்து அதிகமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அமைச்சரினால் வழங்கப்பட்டது.
Post a Comment