Header Ads



நாட்டு மக்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் பகிரங்க மன்னிப்பு கோரினார்


நிட்டம்புவ - கலகெடிதெனிய பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட தேர்தல் வாக்கு அட்டைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா இன்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து முறையிட்டுள்ளார். 

கடந்த 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா தேர்தல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட 'அன்னம்' சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்ட 430 வாக்கட்டைகள் நிட்டம்புவ கலகெடிதெனிய மகாவித்தியாலயத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டன. கடந்த 23ஆம் திகதி இவை மீட்கப்பட்டன.  2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக  போட்டியிட்டார்.

இந்தநிலையில் குறித்த வாக்கட்டைகள் எவ்வாறு பாடசாலைக்கு அருகில் கிடைக்கப்பெற்றது என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அத்தனகல நீதவான் நேற்று காவல்துறையினருக்கு பணிப்புரைவிடுத்தார்.

இதனடிப்படையில், சரத் பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்துள்ளார். 

இதன்போது, கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, சட்ட விரோதமான செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார்.


தேர்தல் நிறைவடைந்த பின்னர் வாக்குச் சீட்டுகளை அழிப்பதற்கு கொண்டு சென்ற போது எமது அலுவலரால் இந்த அவை குறித்த பகுதியில் எறியப்பட்டுள்ளன.  குறித்த அலுவலரின் கவனயினத்தால் இவ்வாறு வாக்குச் சீட்டு  இடப்பட்டிருந்தது.வாக்குச் சீட்டு தொடர்பில் எந்த சட்டவிரோதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு எதிர்வரும் பெப்ரவரி மாதயிறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். இதற்காக தாம் அனைத்து அரசியல் வாதிகளிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தேர்ல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Sfm

No comments

Powered by Blogger.