எமது உரிமைகளும், கடமைகளும் - ஓர் சுய விசாரனை
இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் எம்மை சுய விசாரனை செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இலங்கை நாட்டில் முஸ்லிம்களாகிய எமக்கு அல்லாஹ்வின் கிருபையாலும் எமது முன்னோரினினது தூர நோக்கு மிக்க சிந்தனை மற்றும் முயற்சியாலும் தமக்கு என்ற தனித்துவமான பல உரிமைகளை அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுள்ளமையை நாம் அறிவோம்.
1. காணி , வராஸத் சட்டம்
2. விவாக விவாகரத்து சட்டம்
3. முஸ்லிம் அரச பாடசாலைகள்
4. பெண்களுக்கான சம்பளத்துடன் கூடிய இத்தா கால விடுமுறை
5. பகிரங்கமாக அதான் சொல்லும் உரிமை
6. இலங்கை வானொலியில் ஐவேளை அதான் ஒலிபரப்பு
7. ரமலான் விடுமுறை
8. ஹஜ் யாத்ரீகர்களுக்கு விமான நிலையத்தில் தனியான நுழைவாயில்
9. நீதிமன்றத்தில் தொப்பி அணிந்து செல்லும் உரிமை
10. பாடசாலை மாணவிகளுக்கான பர்தா உரிமை
11. ஜும்மா விடுமுறை
12. ஹலால் அங்கிகாரம்
13. முஸ்லிம் ஜனாஸாக்களை 24 மண்நேரத்துக்குள் வைத்தியசாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை
14. இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் அதனை எவ்வாறாக பயன்படுத்திகின்றோம் என சிந்திக்க வேண்டியது இலங்கை வாழ் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் கடமையாகும். இவற்றில் ஓரிரண்டை இங்கு ஆராயலாம் என நினைக்கின்றேன்.
1. முஸ்லிம் அரச பாடசாலைகள் என பார்க்கும் போது வெறுமனே கிராத் ஓதி துவங்கி ஸலவாத்துடன் முடிப்பதா முஸ்லிம் பாடசாலைகள். அல்லது முஸ்லிம் பெயரை வைத்திருப்பதனாலா முஸ்லிம் பாடசாலைகள். ஏனைய பாடசாலைகளை விட நாம் என்ன வித்தியாசத்தை காட்டினோம்?. முஸ்லிம் அரச பாடசாலைகளில் இஸ்லாம் உயிர் வாழ்கின்றதா? அல்லது பெயரளவில் முஸ்லிம் பாடசாலைகளாக காணப்படுகாறதா? இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை கொண்டதாக முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகாறதா? எமது பாடசாலைகளிற்கு எமது சமூகத்தினது ஆதரவு எவ்வாறுள்ளது? எமது பாடசாலைகளின் கல்வித்தரம் என்ன?
2. பெண்களை பார்க்கும் போது அவர்களிடம் பர்தா(ஹிஜாப்)வுடைய வாழ்வு இருக்கிறதா? ஹிஜாபை மறந்த பெண்மனிகள் எத்தனை? ஆடையமைப்பு எவ்வாறுள்ளது? ஆண், பெண் தொடர்பு எவ்வாறுள்ளது? இதே வேளை ஆண்களது உடை, சமூகத்தொடர்பு குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம்.
3. ஐவேளை அதான் சொல்லப்படுகிறது. ஆனால் மஸ்ஜித்களின் நிலமை என்ன ஜும்மாவிற்கு சேரும் சனக்கூட்டத்தில் பாதியளவாவது ஐவேளை தொழுகைக்கு சேருகிறதா?
4. ஆரம்ப காலத்தில் காணப்பட்டது போல இன்று எம் சமூகத்தில் நம்பிக்கை, நாணயம், வாக்கு மீறாமை, நேரம் தவறாமை, கொடுக்கள் வாங்களில் அமானிதம் பேணல் என்பன காணப்படுகிறதா?
5. நமக்கென்று தனித்துவமான உரிமைகளை பெற்ற நாம் அதனை மதிக்கின்றோமா?
6. நமக்கென்று தனித்துவமான பல உரிமைகளை பெற்ற நாம் ஏன் அதனை பெற்றோம் என சிந்தித்தோமா?
7. எமது வணக்கஸ்தலங்களையும் , மத்ரஸாக்களையும் , கலாச்சாரத்தையும் , சின்னங்களையும் , உரிமைகளையும் , சொத்துக்களையும் பாதுகாக்க என்ன திட்டங்களை வகுத்திறுக்கின்றோம்?
8. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் நாம் இஸ்லாம் கூறும் முஸ்லிம்களாக வாழ்கின்றோமா?
9. எமது நாட்டில் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக பல சதித்திட்டங்கள் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கின்ற இவ் வேளையில் நாம் எம்மிலே எத்தனை பேர் எமது பிரச்சினைகளை அல்லாஹ்விடம் பாரம் சாட்டி அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்தித்தோம்?
சிந்திப்போம். உடணடியாக அல்லாஹ் சொன்ன பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் எம்மை மாற்றி உண்மை முஸ்லிமாக வாழ உறுதி பூணுவோம்.
Post a Comment