கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் கவனத்திற்கு..!
(எஸ்.எல். மன்சூர்)
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தயட்டகிருள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினர் திட்டமொன்றை வகுத்துள்ளனர்.
2013 தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியில் எழுத்துத் துறையில் ஈடுபடுகின்ற மற்றும் ஈடுபட எதிர்பார்த்திருப்போருக்கு உதவி செய்யும் நோக்குடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக அதன் தலைவரும் பேராசிரியருமான சோமரத்ன பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் எழுத்தாளர்களது நூலுருவாக்கத்திற்கு பின்வரும் விடயங்களில் உதவி செய்யவுள்ளனர். கைப்பிரதி அச்சிடுவதற்கும், அச்சிட்ட வெளியீடுகளை விலை கொடுத்து வாங்குதல் (2012, 2013) சர்வதேச நியம இலக்கச் சட்டத்தின்கீழ் இலக்கம் வழங்குதல், நூல் எழுதுவதற்கான சரியான ஆலோசனைகள், நூலகம் தரப்படுத்தல் சம்பந்தமான தகவல்கள் போன்ற பலதரப்பட்ட சேவைகளை இக்காண்சித்திடலில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, எழுத்துத்துறையில் ஆர்வமுடையோர் இக்கண்காட்சித் திடலில் அமையப்பெறவுள்ள கல்வியமைச்சின் கீழுள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினரின் கண்காட்சிக் கூடத்தில் இதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதுக்கும் நம்மட முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்களிடம் கேட்டு பாருங்கோ. அவர்கள் தான் நிறைய அறிக்கைகளும்,ஆக்கங்களும் வைத்திருப்பாங்க.
ReplyDelete"எப்படி பாராளுமன்றத்தில் சும்மா இருப்பது" என்று.
அதிலும் ஹசன் அலி நம்பர் வன் (அறிக்கை மண்ணன்) ஆச்சே!