றிசானா பிறந்து, வளர்ந்து, ஓடியாடி விளையாடிய வீட்டை இடித்து விடாதீர்கள் - தாயார் வேண்டுகோள்
(Tm) மூதூர் சாபி நகரில் ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு வீடொன்றை கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது.
இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையிலேயே இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.
வீட்டு நிர்மானங்களுக்கு பொறுப்பாக இராணுவத்தின் 224 ஆவது படையணி தலைமை அலுவலகத்தின் கர்னல் விக்கும் லியனகே செயற்படுவார்.
ரிசானாவின் தாயாரான அஹமது செய்யது பரீனா மற்றும் தந்தை மொஹமது சுல்தான் நபீக் ஆகியோரே அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.
சவூதியில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட தனது மகளான ரிசானா நபீக் வாழ்ந்த குடிசையை உடைக்காமல் இந்த வீட்டை கட்டுமாறு ரிசானாவின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment