Header Ads



சகவாழ்வுக்கும், தனித்துவம் காத்தலுக்கும் இடையில் இலங்கை முஸ்லிம்கள்



(MJM. JASEEM)

(டிசம்பர் 27, 2012, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் இடம்பெற்ற சிந்தனைக்களம் நிகழ்ச்சியின் தொகுப்பு. இக்கலந்துரையாடலில் ஜாமிய்யா நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் shm. பளீல் மற்றும் மீள்ப்பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சகோதரர் சிராஐ; மஸுர் ஆகியோர் கலந்து கொண்டனர்)

இந்நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்தவரை பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றார்கள். பேரினம், அதற்கடுத்த இனம் மற்றும் ஏனைய மத இனத்தவர்களோடு மிகவும் சௌஞன்யமாக வாழ்ந்து வந்தோம், வருகின்றோம். ஆனால் அண்மைக்காலமாக இந்த இன உறவை அல்லது உணர்வை சீர்க்குலைப்பதற்கான கைங்கரியங்கள் இவ்வப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் தலைமைகளும் புத்தி ஐPவிகளும் சொல்வது போல மேற்படி காரியங்களை செய்வோர் பெரும்பான்மை இனத்தவர்களில் ஒரு சில பேர் வழிகளே, இப்படியான ஒரு கட்டத்திலே தற்போது நாம் மேற்கொண்டு நடந்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன? அவற்றை சீர் செய்வதற்கான வழி வகைகள் என்ன? 

கலந்துரையாடலின் சுருக்கம்:

ஒரு முஸ்லிமைப் பொறுத்தமட்டில் தான் வாழும் நாட்டில் வாழ்கின்ற ஏனைய மதத்தவர்களுடன் சகவழியை அல்லது சௌஞன்ய வாழ்வை மேற்கொளவது அவசியம் என்பது போல அவன் தனது தனித்துவத்தை, இஸ்லாத்தின் வரையறைகளை பேணி நடக்க வேண்டிய அவசியப்பாடும் இருக்கிறது.

கலந்துரையாடலின் நோக்கம்:

இந்நாட்டு சமூகங்களுக்கிடையே எழுந்துள்ள சச்சரவுகள், சந்தேகங்களை களைந்து நல்ல உறவுகளை ஏற்படுத்துதல்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக முஸ்லிம்கள் ஏனைய மத இனங்களோடு மிகவும் பிண்;னிப்பினைந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல், நிர்வாகக் கட்டமைப்பு என்று அனைத்து துறைகளிதும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இந்நாட்டை விட்டு எவ்வகையிலும் பிரித்;து நோக்க முடியாத வகையில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வந்திருக்கிறது இன்னும் வாழ்ந்து வருகின்றது.

சமகாலத்தில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமற்ற தன்மை நிலவி வருகின்றது. இந்நிலைமை ஒருபோதும் நீடித்துவிடக் கூடாது. ஏனெனில் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் என்பவற்றில் மிகவும் பலம் வாய்ந்த சமூகம் என்பதற்கில்லை. அத்தோடு இந்நாட்டிலே முஸ்லிம்கள் சிதறுண்டு வாழ்கின்றார்கள். அவர்களது ஊர்களுக்கு இடையில் பாரிய இடைவெளிகள் காணப்படுகினறன. கல்விமான்கள், அரசியல்வாதிகள், உயர் அரச அதிகாரிகள் என்றும் பெரிதாக இல்லை. ஒரு பக்கம் புரிந்துணர்வின்மை மறுபக்கம் நாம் பலம் குன்றிய சமூகம். இந்நிலையில் இந்த உறவு விரிசல் அவ்வளவு ஆரோக்கியமல்ல.

இந்நாட்டிலே வாழக்கூடிய பெரும்பான்மை மக்கள் நல்ல பண்பு கொண்டவர்கள் என்று எம்மில் பலர் கூறுவதை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இஸ்லாமிய பெறுமானங்களை பெரும்பான்மை சமூகத்திடம் நாம் காண்கிறோம். முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயம், நன்கு பழகக்கூடிய சுபாவம், வாக்குமீறாமலிருத்தல், பொறுமை போன்ற பல நற்பண்புகளை கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் மிகச்சிறு குழுவினரே இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான சில சதி முயற்சிகளை திட்டமிட்டு செய்து வருகின்றனர். இது கவலைக்குறிய விடயம்.

இப்போது மீடியாக்களிலே ஒரு பொய்யை திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் உண்மைப்படுத்துதல் என்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய ஒரு தவறான விடயததை திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் அதனை உண்மைப்படுத்த முயற்சிக்கின்றனர். அதேப்போன்று மாநாடுகள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், ன்பனவும் இரு இனங்களையும் மோதச்செய்யக்கூடிய ஊடகமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் இச்சிறு குழுவினர் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்துகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான சதி முயற்சிகள் திட்டமிட்டு நடைப்பெறுகின்றன என்பதற்கு ஆதாரமாக, முஸ்லிம் பிரதிநிதிகள் இந்நாட்டின் உயர் அதிகாரியொருவரை சந்தித்தார்கள். அப்போது அவர் கூறினார், இந்நாட்டில் ஒரு சிறு குழுவினர் தமது சுய இலாபங்களை அடைந்துக் கொள்வதற்காகவே இவ்வாறான வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் சில நூற்றுக்கணக்கான நபர்களின் கூட்டம் என்று கூறியிருந்தார்.

இச்சிறு குழுவினரின் செயற்பாட்டிற்கு பிண்ணனியில் இருக்கும் காரணிகள்:

* பொருளாதாரக் காரணி: முஸ்லிம்கள் பொருளாதாரத்திலே முனனேறிச் செல்கின்ற நிலையில் இதை பொறுக்க முடியாமல், அவர்களை பின்னடையச் செய்ய வேண்டுமாயின் இவ்விடத்தில் மதத்தை அல்லது இன உணர்வை ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று யோசிக்கலாம்.
சர்வதேச சக்திகளின் தலையீடு அல்லது அவர்களது பொருளாதார ரீதியான பங்களிப்பு.

ஒரு சிறு குழுவின் இந்நடவடிக்கைக்கு முழு பெரும்பாண்மை சமூகமும் பிண்ணனியில் இருக்கிறது வன்ற கருத்திற்கு நாம் வந்து விட முடியாது. ஆனால் இச்சிறு குழுவினரின் இஸ்லாத்திற்கெதிரான தீவிர பிரச்சாரம் காலப்போக்கில் அனைவரது மனங்களையும் மாற்றி ஒரு பொய்யை வரலாற்று உண்மையாக்குவதற்கான வாய்ப்பு உருவாகலாம்.

அவர்களின் குற்றச்சாட்டுகள் பின்வரும் பிரதான தலைப்பின் கீழ் உள்ளடங்குகின்றன.

* இஸ்லாம் பெண்களுக்குரிய உரிமைகளை வழங்குவதில்லை.

* இஸ்லாமிய அரசை பொறுத்தவரை அது தாருல் இஸ்லாம், தாருல் குப்ர் என்று பிரிக்கப்பட்டு இஸ்லாமிய அரசொன்று உருவாகி விட்டால் அங்கு சிறுபான்மையினருக்கு எவ்வகையிலும் உரிமைகள் வழங்கப்பட மாட்டாது.

* இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானது.

* இஸ்லாம் ஆயுத பலத்தை பிரயோகித்து முஸ்லிம்களை அடக்குகிறது.

* முஸ்லிம்களிடம் ஐPவகாருண்யம் கிடையாது.

* மதப்பிரச்சாரம் தீவிரமாக பலாத்காரமாக மேற்கொள்ளப்படுகிறது.

தங்களது விசமப்பிரச்சாரத்தை பரப்ப 20 க்கும் மேற்பட்ட இணையதளங்களையும், 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.

இச்சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?
இந்நேரத்தில் நாம் அவசரப்படவோ, உணர்ச்சி வசப்படவோ அல்லது தீவிரமாக சிந்திக்கவோ கூடாது. நபி (ஸல்) கூறினார்கள், 'நிச்சயமாக தீவிரவாதிகள் அழிந்து விட்டார்கள் அல்லது அழியட்டும்'. எங்களை நோக்கி அவர்கள் கற்களை எறிகின்றார்கள் என்பதற்காக நாமும் அவர்கள் மீது கற்களை எறியக்கூடாது. நாம் திட்டமிட்டு செயற்பட வேண்டிய தேவை இருக்கிறது.

அந்தவகையில், ஒரு பிரட்சினை வருகின்ற போது அப்பிரட்சினைக்கு நான் எந்த வகையில் காரணமாக அமைந்தேன் என்பதை சிந்திப்பதே முதற்கட்டமாக அமைய வேண்டும்.

இந்நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ வேண்டுமென்றால், இஸ்லாம் அதற்கான வழிவகைகளை காட்டித்தந்திருக்கிறது. அப்படியான வாழ்க்கை முறையை நாம் பின்பற்றவில்லை என்ற முடிவுக்கு முதலில் நாம் வர வேண்டும். இஸ்லாம் பிற மதத்தினரோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்ற போதனையை எமக்கு கற்றுத்தந்துள்ளது. அந்த நிலையில் நாம் நிறைய தவறு விட்டிருக்கிறோம்.

இவ்வாறான சூழ்நிலை உருவாக முஸ்லிம்கள் எவ்வகையில்; காரணமாக அமைந்திருக்கிறார்கள்?.

1. அக்லாக் எனும் இஸ்லாமிய விழுமியங்கள் பண்பாடுகளை பின்பற்றாமை.
இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் மற்றைய சமூகத்தினருக்கு இடையுராக இருக்கக் கூடாது. எங்களைப் பார்த்து அவர்கள் இது ஒரு பீடையான சமூகம் என்று எண்ணிவிடக்கூடாது. பஸ்களிலே பிரயாணஞ் செய்கின்ற போது, வாகனங்களை Pயசம பண்ணும் போது, ஒரு அலுவகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளின் சேவைகளை பெறுகின்ற போது, நோயாளிகளை பார்வையிட வைத்தியசாலைக்கு செல்லும் நேரத்தை கவனத்திற் கொள்ளும் போது ஆகிய அனைத்து நிலைமைகளிலும் பிறருக்கு இடையுறு கொடுக்கக்கூடாது. 
எல்லா சந்தர்ப்பங்களிலும் இஸ்லாமிய விழுமியங்களை கடைப்பிடிக்க முடியுமாக இருந்தால், நிச்சயமாக இச்சமூகம் இந்நாட்டுக்குத் தேவை என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். அவர்கள் எங்கள் மீது அன்பு வைக்கக்கூடிய நிலைக்கு மாறிவிடுவோம். நாம் இந்நாட்டிற்கு அவசியமானவர்கள் என்ற கருத்தியலை அவர்கள் மனதில் விதைக்கும் படியாக நடந்துக் கொள்ள வேண்டும். 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த இமாம் அலி நத்வி அவர்கள் கூறினார்கள் 'முஸ்லிம்களாகிய உங்களுக்கு தஃவாவிற்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன ஆனால் பண்பாடுடைய வாயில் மாத்திரம் திறந்திருக்கிறது'
இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்தினரின் உள்ளங்களை வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோமேயானால் எமக்கு ஏதாவது பிரட்சினை, அனர்த்தம் ஏற்படுகின்ற போது குரல் கொடுக்கக்கூடியவர்களாக மாறுவார்கள். தம்புள்ளை பள்ளி தாக்குதல் சம்பவத்தை எடுத்து நோக்கினால், அப்பிரட்சினையில் சிறு குழு ஈடுபட்டாலும் பெரும்பான்மையான மக்கள் தார்மீக ஆதரவை கொடுத்தார்கள் பொலிஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கூட முஸ்லிம்களின் நிலைப்பாட்டை சரிகண்டார்கள். சில நாட்களுக்கு முன் இந்நாட்டில் ஓர் அரசியல் கட்சி கூட முஸ்லிம் சமூகத்தை ஆதரித்து துண்டுப்பிரசுரங்களை வினியோகித்திருந்தார்கள்.

இந்நாட்டிலே நாம் இருந்துகொண்டு அந்நிய நாடு... அந்நிய நாடு.. என்று பலர் பேசுகிறார்கள். எது அந்நிய நாடு? நாங்கள் பிறந்து, வளர்ந்து, மரணிக்க இருக்கின்ற தாய் நாட்டை வளப்படுத்த வேண்டிய கடப்பாடு, மார்க்க கடப்பாட்டிலே இருந்து கொண்டு அறியாமல் இச்சொற்களை பாவிக்கின்றோம். எமது பேச்சுக்களில் கூட பண்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கொள்கை என்பது வேறு சமூக உறவு என்பது வேறு. சகவாழ்வை மேற்கொள்வதற்காக வேண்டி எமது தனித்துவத்தை ஒருபோதும் விட்டுவிடவும் கூடாது. தனித்துவத்தோடு இணைத்து சகவாழ்வும் இருக்க வேண்டும்.

2. கல்வித்துறையிலும் மீடியாத்துறையிலும் ஈடுபாடு காட்டாமை.

முஸ்லிம்களின் சராசரியான சனத்தொகை 10 வீதம் என்று வைத்துக்கொண்டால் சிறைச்சாலையில் இருப்போரின் வீதம் அதில் இரண்டு மடங்காக இருக்கிறது. நோயிலே பார்த்தாள், நீரிழிவு நோயில் 21 வீதமானோர் முஸ்லிம்கள். எதிர்மறையான விடயங்களில் உச்சியை அடைந்துள்ள நாம் கல்வித் துறையில் மிகவும் பின்தங்கி காணப்படுகின்றோம். 15.02.2012 வெளியான ஒருபத்திரிகையின் துனுக்கொன்று கூறுகிறது, vat வரி மோசடி தொடர்பில் 14 பேர் கைது, அதில் 12 பேர் முஸ்லிம்கள். இந்நிலைக்கு இவர்கள் வர காரணம்.

* இஸ்லாமிய அறிவின்மை.
* நாட்டின் சட்டதிட்டங்கள் தெரியாது.
* கல்வியின்மையால் தொழில் வாய்ப்பின்மை.
முஸ்லிம் சமூகத்திற்குள்ளே மிக காத்திரமான முறையில் சிந்திக்கின்ற, செயல்படுகின்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஏனெனில், எமது பிரட்சினை எது? அப்பிரட்சினையை எவ்வாறு கையாள வேண்டும்? என்று நுனுக்கமாக செயற்படுகின்றவர்கள் குறைவு. அவர்களது எண்ணிக்கையை கூட்டுவது காலத்தின் தேவை. 

அரச உத்தியோகத்தர் பதவி வகிப்பவர்கள் முஸ்லிம்களில் ஒப்பீட்டு ரீதியில் மிகக் குறைவு. நல்ல கல்வியறிவு படைத்தவர்களாக முஸ்லிம் சமூகம் இருந்தால் இவ்வாறான உயர் பதவிகளை அடைவது என்பது கடினமன்று. இப்படி உயர் பதவிகளை வகிக்கும் போது அத்தளத்தில் இருந்து கொண்டு இஸ்லாத்திற்கெதிராக சூழ்ச்சி செய்வோரை இணங்கண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்நாட்டு நீதித்துறையை பொறுத்தவரை முஸ்லிம்கள் ஒப்பீட்டு ரீதியில் முன்னிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு நீதித்துறையில் நற்பெயர் காணப்படுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களில் சட்டரீதியான சூழ்ச்சிகள் நடக்கும் போது அதனை வெல்லக்கூடிய வாய்ப்பு ஏறபட்டுள்ளது.

மீடியா இன்றைய காலகட்டத்தின் மிகப்பெரும் ஆயுதம். சமூக ஊடகங்களான Facebook, Twitter  போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றார்கள் என்றால் அதற்கு அனாவசியமான பிரபல்யத்தை தேடிக்கொடுக்கக் கூடாது. Facebook and Share  செய்வதற்கு முன் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் எப்படி செயற்பட வேண்டும்? முஸ்லிம்கள் நாட்டுக்குச் செய்த பங்களிப்பு என்ன? என்பன பற்றி ஊடகங்களினூடாக தெளிவுபடுத்த வேண்டும்.

இஸ்லாத்தினை தெளிவாக விளங்கப்படுத்தக் கூடிய வகையில் இஸ்லாமிய சிங்கள மொழியிலான நூல்கள், துண்டுப்பிரசுரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக பாரிய அளவிலான நிதி அவசியம். இன்று 4 மாதங்களுக்கு ஒரு முறை உம்றா செய்யச் செல்பவர்களின் தொகை 20,000 பேர், 200 கோடி ரூபாய் செலவாகின்றது. இத்தொகையை இவ்வாறான சமூக நலப்பணிகளில் மூலதனமிட்டால் சிறந்த விளைச்சலைப் பெறலாம்.

3. ஓற்றுமைப்படுதல் அல்லது ஐக்கியப்படுதல்

நாம் பிளவுபட்டிருப்பது எங்களுக்கு அப்பால் உள்ளவர்கள் தைரியமாக செயற்பட ஊக்குவிக்கிறது. நாமெல்லாம் உடன்படக்கூடிய ஓர் இடம் இருக்கிறது. அதுதான் சந்திப்புப்புள்ளி (Meeting Point).   நாம் எல்லோரும் ஏதாவது ஓர் விடயத்தில் புரிந்துணர்வுக்கு வர வேண்டும். அதற்கு நாம் மனம் திறந்து பேச வேண்டும். அப்போதுதான் அந்த சந்திப்புப் புள்ளியை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு ஒன்றுபட்டு பேசும் போது ஐக்கியம் உருவாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)  என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். நாம் பிரிந்திருந்தால் எதிராளிக்கு அது வாய்ப்பாக அமைந்து விடும். பிரித்தாளும் கொள்கையை (Divide & Rule)  சர்வதேச சக்திகள் பயன்படுத்துகின்றன. அந்த வலையில் ஒருபோதும் நாம் சிக்கி விடக் கூடாது.

பிரிந்திருந்தால் எமது எதிரி நம்மை காட்டிக்கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். இதனால் எமது இரகசியங்கள் வெளிச்செல்ல வாய்ப்பாக அமையும். 'நீங்கள் ஒன்றுபடா விட்டால் உலகத்திலே மிகப்பெரும் பித்னா ஏற்படும்' (அல்குர்ஆன்)  





No comments

Powered by Blogger.