Header Ads



நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், கர்ப்பிணி பெண்களின் அவலங்களும்..!



(சுலைமான் றாபி) 

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தற்போது கவனிப்பாரற்ற   நிலையில் காணப்படுகிறது. இங்கு தற்போது நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி இன்றி பல்வேறு சிரமங்களையும், அசௌகரியங்களையும் இங்கு வரும் பயனாளிகள் அனுபவிக்கின்றனர். இந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தினம் தினம் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் அதிகமாக சனிக்கிழமைகளிலே கூடுதல் பயனாளிகள் பயன் பெறுகின்றனர். 

இங்கு சுகாதாரம் சம்பந்தமான அறிவுறுத்தல்கள்,  சிறுவர்களுக்கு தடுப்பூசி  ஏற்றுதல், மற்றும் கர்ப்பிணிகளுக்கான விசேட சிகிச்சைகள் என பல சிகிச்சைகள் இங்கு நடைபெற்று வருகின்றன. இருந்த போதும் சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி இல்லாமலேயே இதன் சிகிச்சைப்பயணம் தொடர்கதையாக  சென்று கொண்டிருக்கிறது. 

கடந்த வருடங்களில் வைத்தியர் M ஹமாம் இங்கு கடமையாற்றினார், ஆனால் தற்போது அவர் ஒலுவிலுக்கு இடமாற்றம் பெற்று சென்றதனால் அவரின் இடத்திற்கு சம்மாந்துறையை சேர்ந்த வைத்தியர் தஸ்லிமா தற்போது பதில் கடமை புரிந்து கொண்டு வருகின்றார். சில வேளைகளில் அவருக்கு சமூகம் தர முடியாவிட்டால் நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr MCM மாஹிர் , Dr  M முனீர் சிகிச்சைகளை வழங்குகின்றனர். 

இருந்த போதும் இவர்கள் இருவரும் வருகை தர முடியாவிட்டால் ஒருவர் மட்டும் எவ்வாறு கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்குவது..? மேலும் இங்கு சிகிச்சைகள் காலை 8 மணிக்கு ஆரம்பித்தாலும் பதில் வைத்தியர்கள் 10 மணிக்கு வந்தே இந்த சிகிச்சைகளை வழங்குகின்றார்கள். இதனால் கர்ப்பிணிகள் காலை  11 மணிக்குப் பின்சென்றே சமையல் வேலைகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இது இவர்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கின்றது. இது தவிர வைத்தியர்கள் சமூகம் தர முடியாவிட்டாலும் இங்கு இருக்கின்ற தாதியர்கள்  சில வேளைகளில் சிகிச்சைகளை  வழங்குகின்றனர்!!!  இங்கு என்ன நடக்குதேன்பதே தெரியவில்லை!! 

வைத்தியர்கள் வழங்குகின்ற சிகிச்சை முறைக்கும் தாதியர்கள் வழங்குகின்ற சிகிச்சை முறைக்கும்  ஈடாகுமா?? இதனால் இங்கு வரும் கர்ப்பிணிகள் இவர்கள் மீது துவம்சம் செய்து வெளிநடப்பு செய்கின்றனர். சமுதாயத்தில் கர்ப்பிணிகள் மிக முக்கியமானவர்கள் என்பதினால் அவர்களுக்கு எல்லோரும் முன்னுரிமை வழங்குகின்றனர். ஆனால் இங்கு இவர்களின் சிகிச்சை முறைகளிலும் விளையாட்டு இடம் பெறுகின்றது! ஏதாவது இவர்களுக்கு நடந்தேறினால் பொறுப்புக்கூறுவது யார் கடமை?? 

எனவே, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை தவிசாளர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் செறிந்து வாழும் இவ்வூரில் இந்த அலுவலகத்தின் அவல நிலை தெரியாமல் அவர்களும் வாழ்ந்து வருவது மனவேதனையை தருகிறது. எனவே சமுதாய  நலன் கருதி  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் இந்த குறையை நிபர்த்தி செய்ய முன்வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

1 comment:

  1. திறமையற்ற டாக்டர்களால் திறமையற்ற நிர்வாகத்துடன் இயங்கும் sorry தூங்கும் நிந்தவூர் வைத்ய சாலை பற்றி பொது மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளர்கள்

    ReplyDelete

Powered by Blogger.