கண்டி முஸ்லிம்களின் முன்மாதிரி (படங்கள் இணைப்பு)
(ஜே.எம்.ஹபீஸ்)
இனங்களுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்கும் முகமாக நபி முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தினத்தன்று கண்டியில் 4000 ற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கண்டி நகர ஜம்மியத்துல் உலமா சபை , மத்திய மாகாண சபை அங்கத்தவர் செய்னுல் ஆப்தீன் லாபிர் ஹாஜியார், கண்டி நகர முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் நலன் விரும்பிகள் பலர் ஒன்றிணைந்து கண்டி வைத்தியசாலையில் வதிவிட சிகிட்சை பெறும் சுமார் 3000 ற்கும் மேற்பட்டவர்களுக்கும் வைத்திய சாலை ஊழியர்கள் சுமார் 1000 பேருக்கும் வெள்ளிக் கிழமை மதிய உணவை வழங்கினர்.
சுமார் ஆறு இலட்ச ருபாய்க்கு மேற்பட்ட தொகை இப்புன்னிய காரியத்திற்காகச் செலவிடப்பட்டது.
இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை அங்கத்தவர் லாபிர் ஹாஜியார் தெரிவித்ததாவது,
ஒரு மனிதனுக்கு உணவளிப்பது மிக நல்ல ஒரு காரியம். அதிலும் நோய் வாய்ப்டுள்ளவர்களுக்கு ஒருவேளை உணவளிப்பபது அதனை விடவும் ஏற்றமுள்ள விடயமாகும். மேலும் முஸ்லீமகளை சந்தேகக் கண்கொண்டு பலரும் நோக்கும் இக்காலக்கட்டத்தில் இவ்வாறான புன்னிய காரியங்களை இன மத குல,சமய பேதங்களுக்கு அப்பால் இருந்து அவர்களும் மனிதர்கள்தான். நாமும் அவர்களது உடன் பிறப்புக்கள் என்று சகோதர வாஞ்சையை செயலிலல் காட்டிய கண்டி மாவட்டத்து முஸ்லிம் அமைப்புக்கள் இதற்கான அலோசனை வழங்கிய கட்டி சிட்டி உலமா சபை மற்றும் இதற்காகன தங்கள் முயற்சியை நல்கிய சகலருக்கும் தமது நன்றியைத் தெரிவிப்பதாகக் மறினார்.
இங்கு நன்றி தெரிவித்து உரையாற்றி சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்ததாவது,
எவர் எதைச் சொன்னாலும் கண்டி வைத்தி சாலையைப் பொருத்தவரை முஸ்லிம்களது பங்களிப்பு அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாதவை. சமயத்துறையை வளர்க்க வேண்டிய உலமாக்கள் இவ்வாறான நற்காரியங்களுக்கு தூண்டுகோளாக இருப்பது வரவேற்கத்தக்கது. சமயம் என்பது வாழ்க்கை முறை. எனவே வாழ்கை முறையின் ஒரு அங்கமே வைத்திய சாலைகள். அதில் சிகிட்சை பெறுவோர் மனித சமுகம். எனவே மனித நேயத்தின் பேரால் வழங்கும் நற்காரியங்களுக்கு உரிய பலன் கிடைக்கும் என்பதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.
கண்டி மாநகர சபை அங்கத்தவர் நுஹ்மான் ஹாஜியார்,இஸ்லாமிய சமயப் பெரியார்கள் உற்பட இன்னும் பலர் அரசியல் பேதமின்றி இங்கு கலந்து கொண்டனர்.
நல்லவிடயம் ஆனால் இதுபோன்ற காரியங்களுக்கு வைதியசாலைகளை தவிர்ந்துகொள்வது உசிதம் ஏனெனில் நோயாளிகளுக்கு சுகதேகிகளுக்கான உணவுகளை வித விதமான ருசிகளுடன் வழங்கமுடியாது அவர்களுகென வரையறுக்கபட்டவைகளையே வழங்க முடியும் ஆகவே இப்படியான வைபவங்களை மழையால் பாதிக்கபட்டிருக்கும் பிரதேசங்கள் அகதி முகாம்கள் அனாதை இல்லங்கள் வயோதிபர் இல்லங்கள் ஏழைகள் அதிகமாக வாழும் ஒரு சிறிய கிராமம் என தெறிவு செய்து நடத்தினால் யாவருக்கும் நலம் இல்லையெனில் நோயாளிகளை சாகடிக்க முஸ்லிம்கள் வைதியசாலைகளில் புறியாணி ஹலால் புறியாணி வழங்கு கின்றனர் என்று இனவாதிகள் வசைபாட வாய்பாக மாறும்
ReplyDeleteஎமக்கு வெசாக் உங்களுக்கு மிலாத் இரமண்டும் ஒண்டுதான்
ReplyDeleteஅன்பர் யஹ்ய மொஹம்மத் அவர்களே வார்த்தைகளை கொஞ்சம் அளந்து பேசுங்கள் உங்களுக்கு தெரியுமா அங்கு எவ்வகையான உணவு பறிமாறப்பட்டது என்று ? கூடவே வைத்தியர்களும் அங்கு உள்ளனர் எண்பதை மறந்து விடாதிர்கள். நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதில் என்ன பிழை கண்டீர்கள் ? அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்தார்கள்
ReplyDeleteஇதுதானா எங்களின் ஒற்றுமை ? இப்படி ஒருவர்உகொருவர் நீ செய்வது பிழை நான் செய்வது சரி என்று வசை பாடிக்கொண்டு இருந்தால் எல்லா முஸ்லிம்களும் பாடு திண்டாட்டம் தான் ..............
இஸ்ஹாக் ரஹீம் ஏன் எனது கருத்தை தவராக புறிந்துகொன்டு வம்புக்கு வருகிறீர்கள் அவர்கள் என்ன சாப்பாடு கொடுத்தார்கள் என்பதை படத்தை பார்ததுமே தெறிந்துகொள்ள முடிகிறது மேலும் அவர்கள் நோயாளிகளுக்கு ஏற்றதல்லாத உணவை கொடுத்ததாக நான் குற்றம் சாட்டவும் இல்லை இவர்களது வழமுறை பின்பற்றபடின் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெற வாய்புண்டு குளிக்க போய் சேற்றை பூசிய கதையாக மாற சந்தர்பம் உண்டு என்பதையே சுட்டி காட்டினேன் மேலும் அரச வைதியசாலைகளில் நோயாளிகளுக்கான உணவு கொடுபது அந்த வைதிய சாலை நிர்வாகதின் கடமை எனவே இங்கே போய் சாப்பாட்டை தர்மம் செய்வதால் அரச பணம் மிஞ்சுமே ஒழிய பொதுமக்களுக்கு அதனால் நேரடியான பயண் இல்லை ஆக பொறுத்தமான இடத்தில் பொறுத்தமானதை தர்மம் செய்தால் யாரது வசைபாடலுக்கும் உட்படாமல் தப்பிப்பதுடன் நலவுகளை அதனால் ஏட்படும் மாறங்களை எதிர்பார்களாம்
ReplyDeleteவிஸ்வரூபம் கூடாத படம் என்று கொக்கரித்தீர்கள்.
ReplyDeleteஇப்பொழுது நோயாளிகளுக்கு உணவு கொடுத்ததற்கும் கொக்கரிக்கிரீர்களே?
மத்தவனை குறை பிடித்து தாங்கள் பெரிய ஆள் ஆகலாம் என்று நினைக்கிற ஆட்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது வெட்கமாக இருக்கிறது.
வைத்திய சாலைக்கு சென்று நோயாளிகளுக்கு, டோக்டர்மாருக்கு உணவு கொடுப்பது எவ்வளவு நல்ல விடயம்??
இதைப்போய் யாராவது நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் குறை காண்பார்களா?
ஹலோ வேசம் போட்ட கமல் நம்ம நாடில் ஏதாவது அரச வைதிய சாலைகளில் நோயாளிகள் உண்ண உணவின்றி பட்டனி கிடக்கின்றனறா??? ஏன் கமலை போல நீங்களும் மூலைக்கும் முன் நானுக்கும் சம்மந்தம் இல்லாமல் உளருகிறீர்கள்??/
ReplyDelete