அல்ஜீரியாவில் பிணையக்கைதிகள் ஒருதொகையினர் மீட்பு
அல்ஜீரியாவில் ஆயுததரிகள் வெளிநாட்டினர் உட்பட பலரை கடத்திச்சென்று பிணையக்கைதிகளாக சிறை வைத்தனர்.
லிஸி மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் பிணையக்கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்காக அல்ஜீரியா ராணுவம், நடத்திய வான்வழி தாக்குதலில், கடத்தல்காரர்களில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கான பேச்சு வார்த்தை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், இதுவரை வெளிநாட்டினர் உள்பட 650 பிணையக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Post a Comment