Header Ads



நரிக் கூட்டம் வழிபார்த்துக் கொண்டிருக்கிறது..! பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம்..!



(முஸ்லிம் காங்கிரஸ் ஊடக பிரிவு)

பாராளுமன்றத்தில் 08.01.2013 அன்று மாலை திவிநெகும சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,  நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.

எனக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னையும் அரசியலமைப்பு 18 ஆவது திருத்தச் சட்ட விவாதத்தோடு போது சம்பந்தப்படுத்தி திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தமிழில் உரையாற்றியதனால,  அவை தொடர்பில் விளக்கமளிக்கும் விதத்தில் நானும் தமிழிலேயே உரையாற்றுவது பொருத்தமெனக் கருதுகிறேன். சமகால மொழிபெயர்ப்பு வழங்கப்படுவதால் கௌரவ அமைச்சரும், உறுப்பினர்கள் அனைவரும் எனது உரையை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். 

கௌரவ சுமந்திரன் பேசுகின்ற பொழுது 18 ஆவது சட்டத்திருத்த விவாதத்தின் பொழுது இந்த சபையிலே நான் இந்த நாட்டிலே அதிகாரப் பகிர்வை பாதுகாக்கின்ற விஷயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எதிர்கட்சியிலும், முஸ்லிம் காங்கிரஸினரான நாம் ஆளும் கட்சியிலும் இருந்து அதற்கான நியாயமான போராட்டத்தை முன்கொண்டு செல்லலாம் என்று கூறியதாகப் பேசினார். 

இந்த விஷயத்தை நாம் எங்களால் இயன்றவரை அரசாங்கத்திலிருந்து கொண்டு இதயசுத்தியோடு மேற்கொள்கிறோம் என்பதைப் பற்றி மற்றவர்களை விடவும், கூடுதலாக அறிந்த அமைச்சர்தான் பெசில் ராஜபக்ஷவென்றால் மிகையாகாது. 

நேற்று கூட அவரை எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப்பேரும் சென்று சந்தித்து, இந்த திவிநெகும சட்ட மூலத்தில் எங்களுக்கு இருக்கின்ற சில அக்கறைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், எங்கள் கட்சியின் கொள்கைகள் சம்பந்தமாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு வந்தபொழுது, அவற்றை அவர் மிகுந்த சிரத்தையோடு செவிமடுத்து தன்னால் இயன்றவரை நாங்கள் முன்வைக்கும் திருத்தங்கள் சம்பந்தமான மிகக் கூடிய விரைவில் அந்த உள்ளடங்க்கங்களை மிக விரைவில் இந்த சட்டவாக்கத்திற்கு உள்வாங்கும் முயற்சியை ஏனைய கட்சித் தலைவர்கள் சிலர் முன்வைத்திருக்கின்ற திருத்தங்களோடு சேர்த்து தாம் மேற்கொள்வதாக எங்களுக்கு உறுதியளித்திருக்கிறார். 

அந்த அடிப்படையில் தான் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்கலாமென நான் எண்ணுகின்றேன். விவாதத்தை பின்போடுவது தொடர்பில் இருமுறை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று இந்த விவாதம் நடைபெற கூடாது என எத்தனித்த நீங்கள் மீண்டும் விவாதத்தை பின்போடுமாறு கேட்பது நியாயமில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டடில் இது ஒரு வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் ஆகும். கிராமிய அபிவிருத்தியில், உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் அரச முதலீடுகளை இயன்றவரை செய்து இந்த நாட்டில் வறுமை ஒழிப்பை நல்ல விதத்தில் மேற்கொள்வதற்கு திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்குகின்ற ஒரு முயற்சியாகும். இதற்கு குந்தகமாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்க விரும்பவில்லையென்பதை நாங்கள் மிகத் தெளிவாக அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் சொல்லியிருக்கிறோம். 

அதன்படிதான் அந்த நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நாங்களும் நீங்கள் குறிப்பிட்டதைப் போல இங்கு பார்வையாளராக அமைந்திருக்கின்ற சமுர்த்தி அலுவலர்கள் ஆயிரக்கணக்கானோர் மத்தியிலும் இன்னும் வெளியில் இருக்கின்ற ஏராளமானோர் மத்தியிலும் நாங்கள் சொல்ல விழைகின்ற விஷயம், இது சமுர்த்தி அலுவலர்களின் அரச தொழில் வாய்ப்பு விஷயத்தை எதிர்கின்ற அம்சமாக ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ பார்க்க முடியாது. அவ்வாறு அரசாங்கத்தோடு இருக்கின்ற பங்காளிக் கட்சிகளும் பார்க்கவில்லை. 

அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக எழுந்துள்ள சந்தேகங்கள் பெருமளவில் வெறும் ஊகங்களாகவே இருந்து வருகின்றன. ஏதோவொரு வகையிலே பின்கதவால் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு விடலாம் என்ற சந்தேகம் ஏற்படுவதற்கான காரணம், இந்த வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு அதற்காக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அந்த அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்போகின்ற அனுகூலங்களை பறித்துவிடுவார்கள் என்ற ஊகமும், சந்தேகமும் தான் இப்பொழுது நிலவுகின்றது. எனவே அந்த சந்தேகத்தை களைவதற்குள்ள வழிவகைகள் பலவாறாக இருக்கலாம். அவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் உறுப்பினர் திணைக்களத்தை ஒவ்வொரு மாகாணத்திலும் அமைத்தால் பிரச்சினை தெரிந்து விடும் என்று எடுத்த எடுப்பிலே சொன்னார். 

இதனை சில மாதங்களுக்கு முன்னர் சம்மாந்துறையில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றும் பொழுதும் அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் இந்த விடயம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்க மாட்டாதென்று நான் கூறியிருந்தேன். அரசாங்கத்தைப் பொறுத்தவரை இதை ஒழுங்குபடுத்தப்பட்ட மத்திய அரசின் ஊடாக ஒழுங்கான ஒரு செயல்திட்டத்தின் ஊடாக செய்வதன் மூலம் தான் இந்த நன்மைகளை எல்லோரும் சரியாக அடைவதற்கான விதத்தில் செய்வதன் மூலம் தான் சாதிக்கலாமென அமைச்சர் கருதுகிறார். அந்த கருத்தோடு நாம் முரண்படவில்லை. 

எனவே தமிழ் கூட்டமைப்பு குறிப்பிடுகின்ற அதே விடயத்துக்கான இன்னொரு மாற்றுவழிதான் இந்த வேலைத்திட்டத்தில் தற்போதுள்ள மாகாணப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்வதாகும். வாழ்வின் எழுச்சி என்ற இந்த கட்டமைப்பில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம், திவிநெகும தேசிய சம்மேளனம், மாவட்ட குழுக்கள், தேசிய பேரவை, திவிநெகும பிராந்திய ஒழுங்கமைப்புகள், சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புகள், சமுதாய அடிப்படையிலான வங்கித்துறை சங்கங்கள் என்றுள்ள இன்னொரன்ன கட்டமைப்புக்களில் மாகாண சபைகளின் முகவர்களை உள்வாங்கி முதலமைச்சர்களின் கலந்தாலோசனையோடு இந்த விடயங்கள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் சந்தேகங்கள் களையப்பட்டுவிடும். இதுவிடயமாக அமைச்சருக்கு எதிராக கூறப்படும் விமர்சனங்கள் இல்லாமல் போய்விடும் என்பதை தான் நாம் அமைச்சரிடம் முன்வைத்தோம். எங்களுடைய வாதத்தில் பொதிந்திருந்த யதார்த்தத்தை, உண்மைத்தன்மையை அவர் மறுதலிக்கவில்லை. 

அதனை ஏற்றுக்கொள்கிறார். அதேவேளையில், இது சம்பந்தமாக ஏனைய கட்சிகள் முன்வைத்திருக்கும் பிரேரணைகளை உள்வாங்கி, மிக விரைவில் மாகாண சபைகளையும் இணைத்துக்கொண்டு இந்த விடயத்தை முன்கொண்டு செல்வதற்கு எந்த விதத்தில் எங்களது திருத்தங்களை உள்வாங்கலாம் என்பது பற்றி தாம் தம்முடைய  பதில் உரையில் உரிய உத்தரவாதம் அளிப்பேன் என்றும் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ எங்களிடம் உறுதியளித்திருக்கிறார். 

அந்த அடிப்படையில் தான் இந்த சட்டமூலத்திற்கு எங்களது ஆதரவை வழங்க முன்வந்துள்ளோம். எனவே மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக கூறப்படுகின்ற ஊகங்கள், சந்தேகங்கள் என்பன மாத்திரம் தான் இந்த நிலைமைகளை தோற்றுவித்திருக்கிறது. இதில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இரண்டு முறை மாறி மாறி இந்த விடயம் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பொழுது, இந்த 15 விடயங்கள் சம்பந்தமாக முன்வைத்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என உயர் நீதிமன்றம் கூறியிருக்கலாம். முதல் முறை உயர் நீதிமன்றத்திற்கு சென்ற பொழுது இச் சட்டமூலம் எல்லா மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெற்ற பிறகு தான் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டபொழுது, அமைச்சர் இதனை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து வாபஸ் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

வாபஸ் பெற்றுவிட்டு இந்த சட்டமூலத்தை எல்லா மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைத்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் நாங்கள் ஒரு தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கின்ற நிலையில் அங்கு இருக்கின்ற எங்களது கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சவாலைப் பற்றியும் இங்கு கூறியாக வேண்டும். 

நான் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அதனை பிற்போடுமாறு கேளுங்கள், ஏனென்றால், அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது என நான் அறிவுறுத்தியிருக்கத்தக்கதாக, அவற்றை அரசாங்கத்திற்கு முன்மொழிந்து அதனடிப்படையில் ஆதரிப்பது பற்றி தீர்மானிப்போம் என்று கூறியிருக்கத்தக்கதாக உறுப்பினர்கள் வாக்களித்து விட்டனர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் அதனை வைத்துக்கொண்டு, இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க கூடாது என்று வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்ற சில சக்திகள் உள்ளன. நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால், வெளியிலே உள்ள ஒருசில சக்திகள் ஏதோ விழ வேண்டும் என பார்த்துக்கொண்டிருக்கின்ற நரிக் கூட்டம் மாதிரி நாளையே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகிவிட வேண்டும் என வழிபார்த்துக்கொண்டிருக்கும் பலர் உள்ளனர். 

ஆனால் அவர்களுக்கு உடந்தையாக இருக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் கொள்கை ரீதியாக அமைச்சரிடம் இந்தப் பிரச்சினையையும், சிக்கல்களையும் எடுத்துரைத்திருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல அரசாங்கத்தில் இருக்கும் பங்காளிக் கட்சிகள் பல இந்த விடயங்களை முன்வைத்துள்ளன. நாங்கள் முன்வைத்துள்ள சந்தேகங்களை அவர் கவனத்தில் எடுத்துள்ளார் என்பதை நான் கூறியாக வேண்டும். அதேவேளை இந்த சட்டமூலம் என்பதும், அதனுடைய தாக்கம் என்பதும் இன்று நாடு பூராகவும், ஏற்கனவே இரண்டு முறை உயர் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்ட விடயம் என்ற படியால் அதாவது, அரசியல் அமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர், முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் முதன் முறையாக இச் சட்டமூலம் இருமுறை சவாலுக்குட்படுத்தப்பட்டது. 

அந்தச் சாவல்களை எதிர்கொண்டு அமைச்சர் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் விதந்துரைகளை உள்வாங்கி, திரும்பவும் இந்த சட்டமூலத்துக்கான திருத்தங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்து, உரிய அங்கீகாரத்தைப் பெற்று மீண்டும் இந்த சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையிலே முஸ்லிம் காங்கிரஸினரான நாங்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தீவிர கலந்தாலோசனையில் ஈடுபட்டு, நேற்று நள்ளிரவு வரையிலும் அமைச்சர்களோடு நடந்த உரையாடல் வரையிலும் இந்த விஷயத்தை எங்களது அரசியல் உச்ச பீடத்திற்கு சமர்ப்பித்து நாங்கள் எதிர்நோக்குகின்ற இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக அமைச்சர் சாதகமான பதிலை தருவார் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தி, அதன்மூலம் இன்று அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தை எங்களது அரசியல் உச்ச பீடத்தில் பெற்றிருக்கிறோம். நிச்சயமாக அமைச்சர் அவர்கள் நாங்கள் சமர்ப்பித்துள்ள இந்த எளிதான, சிக்கல்கள் அற்ற இந்த திருத்தங்களை மிக விரைவில் அமுல்படுத்துவதற்கு தன்னுடைய சம்மதத்தை தெரிவிப்பார் என்ற நம்பிக்கையோடு நான் அமைகின்றேன். 

6 comments:

  1. ஏதோநாங்கள் வாக்களித்தமக்கள் ஏங்களுக்கு நல்லதுநடத்தால் போதும்

    ReplyDelete
  2. எங்கள் வாக்கு வீனா பூஹாமல் இருந்தாபோதும்

    ReplyDelete
  3. இப்பொழுதும் நம்பிக்கை அடிப்படையில் தான் ஆதரித்து பேசுகிறீர்கள். நல்லது, ஆனால் இது வரை நீங்கள் வேண்டி அவர்கள் செய்த ஒரு காரியத்தயாவது தயவு செய்து, உங்களை இனி மேலும் நமக்கு நல்லது செய்வான் தலைவன்???? அப்படி நம்பும் மக்களுக்காக சொல்வீர்களா அமைச்ரே ? தமிழில் பேசியது பசில் ராஜபாக்ஸாவுக்கு விளங்க கூடாது என்பதுக்காக தானே......

    ReplyDelete
  4. கேக்கிறவன் கேணையா இருந்தா கேப்பையிலையும் நெய்வடியும் என்ட கதையா இருக்கு..அமைச்சர் ஹக்கீம் சொல்றது...!

    ReplyDelete
  5. nampikkai nampikkai enru sollikkondea iru.oru nal unnudaiya tumpikkayil erumpu(ant)nulaiyaththan phokuthu...............
    appathu-than vilankum unakku................................

    ReplyDelete
  6. நீங்களே ஒரு நரி...!
    இந்தப் பேச்சையும் சிலர் சரி கண்டு கருத்துத் தெருவித்து இருக்கிறார்களே..! இவர்களுக்கு எப்ப தான் புத்தி வருமோ....?

    ReplyDelete

Powered by Blogger.