இந்தியா செல்லவிருந்த இலங்கைப் பயணிகளிடத்தில் தங்கம் கண்டுபிடிப்பு
(எஸ்.எல். மன்சூர்)
நேற்றிரவு 9.30 மணியளவில் (18.01.2013) கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து இந்தியா செல்லவிருந்த இரு இலங்கைப் பிரயாணிகளிடமிருந்து சுமார் 43 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகள் இரண்டினை விமானநிலையச் சுங்கப்பகுதியினர் கைப்பற்றியுள்ளதாக கட்டுநாயக்கா விமான நிலையத்தின் சுங்கப்பகுதிக்கான நிருவாக பொறுப்பதிகாரி எஸ்.நியாஸ் யாழ் முஸ்லீம் வெப்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இப்பயணிகள் இருவரும் இந்தியாவுக்குச் செல்லவிருந்ததாகவும், இவர்கள் இருவரின் நடத்தையிலும் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தியபோது இருவரின் சப்பாத்துக்கடியில் பக்குவமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 600கிராம் தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். கடத்தப்படவிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் இருவரையும் உடன் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டனர். இன்று (19.01.2013) காலையில் நடைபெற்ற விசாரணையின் பின்னர் இருவரிடமிருந்தும் தலா 50ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதன் பின்னர் இருவரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவுக்;கான நிருவாகத்திற்குப் பொறுப்பான சுங்க அத்;தியட்சகர் எஸ். நியாஸ் மேலும் தெரிவித்தார்.
Post a Comment