Header Ads



பாடசாலைகள் இன, மத அடிப்படையில் இனிமேல் ஆரம்பிக்கப்படமாட்டாது - பந்துல


(ஜே.எம்.ஹபீஸ்)

பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் இரு பாலாருக்கும் பொதுவாக இயங்கும் நிலையில் பாடசாலைகள் மட்டும் பிரிந்திருக்கத் தேவையில்லை. இதன்பின் பாடசாகைள் இன, மத, பாலியல் அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலையில் ஆரம்பிக்கப்பட மாட்டாது என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்.

(2013 01 02) கண்டி, நுகவெல மத்திய கல்லூரியில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நுகவெல மத்திய கல்லூரி, நுகவெல மகளிர் கல்லூரி மற்றும் நுகவெல ஆண்கள் பாடசாலை என்பவற்றை ஒன்றிணைத்து மத்திய மாகாணத்தில் மிகப் பெரிய பாடசாலைத் தொகுதியாக நுகவெல பாடசாலை தொகுதியை அவர் ஆரம்பித்து வைத்தார். அதன் பின் இடம் பெற்ற கூட்டத்திலே அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

இலங்கையில் மொத்தம் 9731 பாடசாலைகள் உள்ளன. அதில் மகளிர் பாடசாலைகள் 130 உம் ஆண்கள் பாடசாலை 209 ம் உள்ளன. மிகுதியாக உள்ள 9302 பாடசாலைகளும் கலவன் பாடசாலைகலாகும். 

ஆனாலும் சில பெற்றோர்கள் கலவன் பாடசாலை என்றால் பயப்படுகின்றனர். இலங்கையில் கல்கலைகழகங்களோ, தொழில்நுற்பக் கல்லூரிகளோ ஆண்கள் அல்லது பெண்கள் என பிரிக்கப்பட்டவை அல்ல. அவை அனைதிலும் இரு பாலாரும் கலந்தே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.இது புதிய விடயமல்ல. புதிதாக நடைமுறைப் படுத்தப் படுவதுமல்ல. எனவே கலவன் பாடசாலைகள் குறித்து பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் சமமாப் பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஷேட திட்டம் ஒன்றை ஆரம்பித்தார். அதன் விளைவாக  இலங்கையில் ஆயிரம்  பாடசாலைகள் இடைநிலைப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. 

இதற்கெனத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு அனைத்து வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.