Header Ads



பைசால் எம்.பி.யின் வரவுசெலவு நிதியில் உபகரணங்கள் கையளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பொத்துவில் பிரதேசத்திலுள்ள பல அமைப்புகளுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் 2012ம் ஆண்டுக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்ட நிதியின் மூலம் பெறுமதியான உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.

இவற்றைக் கையளிக்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை பசறிச்சேனை அல்-இஸ்ராக் வித்யாலயத்தில் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாகவும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசித், உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜு தீன், உறுப்பினர் எம்.எச்.ஏ.றஹீம், நிந்தவூர் பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம்.எம்.எம்.அன்சார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பசறிச்சேனை அல்-இஸ்ராக் வித்தியாலயதுக்கு 130,000 பெறுமதியான பிரதிபண்ணும் இயந்திரத்தினை பாடசாலை அதிபர் எம் எல் எம்.ரபீக்கிடம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கையளித்தார்.

அத்துடன் பொத்துவில் டொட் கொம் இழைஞர் மன்றத்துக்கு 130,000 பெறுமதியான கணணி தொகுதியும் தளபாடங்களும் மற்றும் பர்கான் விளையாட்டுக் கழகத்துக்கு 40,000 பெறுமதியான விளையாட்டு உபகரணகளும் வழங்கி வைக்கப்பட்டன. 




1 comment:

  1. R....Hakeem kandal ungallah SLMC ila irunthu nipadi viduruwaru kawanam ithalam awaruku pidigathu ????!!!!!

    ReplyDelete

Powered by Blogger.