முஸ்லிம்களின் சவாலை சல்மான் ருஷ்டி ஏற்றுக்கொள்வாரா..?
சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர்கள் 'நேருக்கு நேர்' விவாதம் செய்யத் தயாரா?" என்று சவால் விடுத்துள்ளனர்.
இறைத்தூதரின் கண்ணியம் என்னும் தலைப்பில் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசிய முஸ்லிம் அறிஞர்கள் சிலர் இந்தச் சவாலை விடுத்துள்ளனர்.
மிட்நைட் சில்ட்ரன் என்னும் தன் நாவலை அதே பெயரில் படம் எடுத்துள்ள தீபா மேத்தாவின் அழைப்பின் பேரில் அப்படத்தின் வணிக உத்திக்கு உதவும் நோக்கில் சல்மான் ருஷ்டி இந்தியா வரவிருப்பதாகக் கூறப்பட்டது.
வஹதத்தே இஸ்லாமி ஹிந்த் என்னும் அமைப்பினர் நடத்திய கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞரும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினருமான யூசுஃப் முச்சாலா இச்சவாலை முன்னெடுத்தார்.
"ருஷ்டி இந்தியா வரவிருப்பதை நாம் தடுக்கப் போவதில்லை; வரட்டும், அவருக்கு மனத்துணிவு இருக்குமென்றால் எங்களுடன் விவாதிக்கட்டும், ஏன் ஒரு அவதூறு நாவலை எழுதினார் என்பதை விளக்கட்டும்" என்றார் முச்சாலா. அவர் மேலும் " ருஷ்டி வருகைக்கெதிராக முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு விடக்கூடாது" என்றும் சக முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டார்.
முச்சாலாவின் கருத்தை ஆமோதித்துப் பேசிய அலிகர் பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் முனைவர். ஷகீல் சமதானி "முஸ்லிம்கள் ருஷ்டிக்குக் கொலை பஃத்வா ஏதும் விதிக்கவில்லை; நாட்டுக்கு வராதே என்றும் சொல்லவில்லை; விவாதம் செய்யத் தான் அழைக்கிறோம்" என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ருஷ்டி வருகைக்கும், இந்த ஆண்டு தஸ்லிமா நஸ்ரின் வருகைக்கும் எதிர்ப்புத் தெரிவித்த அமைப்புகளுள் வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் குறிப்பிடத்தக்கது. inneram
Post a Comment