Header Ads



'என்ற மகள மௌத்தாக்கிட்டாங்களே..! - றிசானாவின் தாயார் கதறியழுகை...!!


எமது யாழ் முஸ்லிம் இணைய கையடக்க தொலைபேசிக்கு இன்று புதன்கிழமை, 9 ஆம் திகதி றிசானா நபீக்கின் தாயார் 2 தடவைகள் அழைப்பெடுத்திருந்தார். அவர் அழைப்பு எடுக்கும் நேரத்தில் எம்மால் பதிலளிக்க முடியவில்லை.

பின்னர் நாம் றிசானாவின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தோம். ''மகன் உண்மையைச் சொல்லுங்கள் இப்போது என்ன நடக்கிறது, என்ற மகளுக்கு எதுவும் நடந்திடாதே... என்று வினவினார்.

இல்லா உம்மா..., உங்க மகளுக்கு எதுவும் நடக்காது, நீங்கள் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நாங்களும் உங்கள் மகளுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று' நாம் றிசானாவின் தாயாருக்கு ஆறுதல் கூறினோம்.

'மகன்... என்ற மகள பத்தி நல்லதோ, கெட்டதோ எதுவென்றாலும் எனக்கு உடனடியாக அறிவிச்சுடுங்க, எல்லா முஸ்லிம்களையும் என்ற மகளுக்காக துஆ கேட்க சொல்லுங்கோ என்றும் சகோதரி றிசானாவின் தாயார் குரல் தளர்ந்த நிலையில் கூறவே, சரி என்று சொல்லிவிட்டு நாம் தொலைபேசி அழைப்பை நிறுத்திக்கொண்டடோம்.

ஏற்கனவே வந்த செய்திகளை எமது இணையத்தில் பதிவேற்றிவிட்டு, றிசானாவின் தாயார் எமக்கு வழங்கிய செய்திகளை (தனது மகளுக்காக முஸ்லிம்கள் துஆ செய்யவேண்டும்) என்ற செய்தியை பதிவிடுவோம் என நினைத்திருந்தோம்.

அப்போதுதான் அந்த துயரச்செய்தி எமது இணையத்திற்கு வந்தடைந்தது. ஆம் சகோதரி றிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற செய்தியாகும்.

இச்செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ள உடனடியாகவே சவூதி அரேபியாவில் உள்ள டாக்டர் கிபாயா இப்திகாருடைய கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டடோம். அவரும் படபடத்த குரலில் றிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார்.

இன்னா இலைஹி வஹின்னா இலைஹி ராஜுஊன் என்று கூறியவர்களாக றிசானாவின் தாயாருக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பெடுத்தோம். அழுதுகொண்டே பதில் வழங்கிய அவரிடம் இன்னா இலைஹி வஹின்னா இலைஹி ராஜுஊன் என்று கூறவே '' மகன் என்ற மகளே மௌத்தாக்கிட்டாங்களே..'' 'என்ற புள்ள என்ன குற்றம்  செய்தாள்'...? என கதறியழ தொடங்கினார். அந்த தாயின் அழுகுரலை கேட்கும் சக்தியற்று உம்மா.. பின்னர் கதைக்கிறேன் எனக்கூறிவிட்ட தொலைபேசியை துண்டித்துகொண்டேன்...!

இப்போது றிசானாவின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லை..!



18 comments:

  1. இவ்விடயதினை முழுமையாக தெரியாமல் பேச கூடாது....
    ஒரு வேளை இது உண்மையான குற்றமாக இருக்கலாம்...அல்லது நிரபராதி தண்டிக்க பட்டு இருக்கலாம்.....
    நாம் வெறுமனே நமக்கு பட்ட கருத்தை சொல்லாமல்.. மார்க்கம்,அல்லாஹ்..இவற்றினையும் மனதில் வைத்துகொண்டு பேசவேண்டும்......
    இந்த உலகில் என்ன நடந்தாலும்.. மருமையில் ஏல்லாம் விசாரணைக்கும் கட்டாயம் கொண்டுவரப்படும்...
    so
    இதன் பின்னால் என்ன நடக்க வேண்டும் எண்டு சமூகம் சிந்திப்பது நல்லது...
    ..
    மஹ்ரம்,சீதனம்,ஸகாத், போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்..சில்லறை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக அமைப்பினை மாற்ற வேண்டும்..

    ReplyDelete
  2. Innalillagi va ina ilagi raajuoon
    Kadduppaddom valippaddom enpathai thavira veru vaarrthai illai. Ithayam valikkirathu kangkal alukinrana ach sagothari in marumaikku thuvaa seivom avarin udan pirappukal porumai kaakka vendum....

    ReplyDelete
  3. றிசானாவின் குடும்பத்திற்கு உதவி செயயுமுகமாக நிதியம் ஒ்ன்றை ஆரம்பிபதுதான் தற்போது நாம் செய்யும் பேருதவி.

    ReplyDelete
  4. This is so sadness news everyone us,every well educated peoples also understanding it was very by mistackelly happend when this late Rishana milk feeding times.So many times asked those victim parents for forgive for allah this incidence never the less they gave death penalthy.What i can say those peoples onlt THERE ARE ANIMALS.

    எத்தன்னை தடைவை மன்னிப்பை அல்லஹ்வுக்கஹவும் கேட்டு மன்னிக்கவில்லை என்றால்,உண்மையில்லே அவர்களளின் இதயங்கள் கல் இரும்பு போன்றது தான்.இவர்கள் எல்லாம் மிருகம் போன்றவர்கள் தான்.

    ReplyDelete
  5. BARBARIAN ACT. This is not Shariah.

    ReplyDelete
  6. Ellam Arindawan Allah awan oruwan mattume..porumai kappom.Emmal mudinda udavikalai anda kudumbathitku seithiduwom.
    Allah Kareem.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்......

    நாம் இப்போது யாரையும் குற்றம் சொல்லி சொல்லி இருப்பதில் எப்பிரயோசனமும் இல்லை,
    இவ்வாறான நிகழ்வுகள் இனியும் நடக்காமல் இருக்க, வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நிறுவனங்கள், மார்க்க விதிமுறைகளைப் பேனி நடக்க வேண்டும்...

    அந்த சகோதரியின் குடும்பத்தினருக்க ஆறுதலை வழங்க வேண்டும் என்பதோடு, அப்பெண்ணின் மறுமை வாழ்வும் சிறப்பாக அமையவேண்டும் என அல்லாஹ்விடம் இருகரம் ஏந்துகிறேன்....

    அல்லாஹும்ம் அஃபிர்லஹா வர்ஹம்ஹா, வஆபீஹி வஅஃபுஅன்ஹா......

    நன்மையை ஆசிக்கும் சகோதரன்:
    எம்.எம். முஆத் (வரகாபொலை)

    ReplyDelete
  8. இஸ்லாமிய நெஞ்சங்களின் மேலான கவனத்திற்கு!!!
    ரிஸானா நபீக்கின் மரணம் மிகவும் கவலை தரக் கூடிய செய்தியாகும். உண்மையியே இஸ்லாமிய உம்மத் இதுபற்றி ஆழமான கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பெண் வீட்டாரை சீதனக் கொடுமையினால் வாட்டி வதைப்பதையும், ஸகாத் முறையைச் சரியாக நடைமுறைப்படுத்தாததும், மற்றவர்களின் நிலை கண்டு வெளிநாடு செல்லத் துடிப்பதையும், பெண் தனியாக பிரயாணம் செய்து பிரிந்து இருப்பதையும், தொழிலுக்காக எந்த விதமான ஹராத்தையும் செய்யத் துணியும் முகவர்களின் அசமந்த செயற் பாடுகளையும் ஏன் எமது தலைமைத்துவங்கள் மற்றும் மதத் தலைவர்கள், புத்தி ஜீவிகள் கவனிக்க மறுக்கின்றனர்.
    இறைவன் சொன்ன அத்தனையும் மனித நலனுக்காகவே இருந்து கொண்டிருக்கின்றது. அவைகளில் சில்லறைகள் ஏதுமில்லை. சில்லறையான ஒரு கூட்டம் மார்க்கத்தில் சில்லறைகளைத் தேட முயல்வதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இஸ்லாமிய அகீதாவை சரியாகப் போதித்தால் எவரும் வழி தவறிச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நபியவர்கள் உருவாக்கிய உம்மத்தை உருவாக்க முயல்வதோடு, மண்ணறையை அடைந்த ரிசானாவுக்காக முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்து இவ்வுலகத்தில் அடையாத எத்தனையோ இன்பங்களை மறுமையில் அடைய வல்ல இறைவனிடம் வேண்டுவோமாக!

    ReplyDelete
  9. றிசானாவின் வயதை கூட்டி அனுப்பிய ஏஜென்சிகாரனை முதலில் தூக்கில் போட வேண்டும்.அத்துடன் மாற்றுமதத்தவர்களை முஸ்லிமாக மாற்றி காசுக்காக மக்கா,மதினாவுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகாரங்களை
    மாறுகை மறுகால் வாங்கணும்.
    இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன் .

    ReplyDelete
  10. SAUDI GROWN WITH BRUTAL WITH AMERICAN BACK. THERE AREN'T MERCY!!. THERE AREN'T WHOLE SARIAH.

    ReplyDelete
  11. This is not Sharia Law at all.The Laws and systems in countries like Saudi Arabia are an "Insult"to Islam and to the Sunnah of our Beloved Prophet.All the Muslims should rise up and denounce these flawed,corrupt systems in Saudi Arabia and other Muslim countries and work for the overthrow these Totalitarian Regimes,which stand against the True Spirit of Islam.
    Zarook

    ReplyDelete
  12. சஹோதரி ரிசானாவின் மரணத்தை அல்லாஹ் இவ்வாறு எழுதி வைத்திருக்கிறான். வீணான விவாதம் ஏன் .

    ReplyDelete
  13. எது சில்லறை விடயம்? உயிர் போவது சில்லறை விடயமா? சவூதி அரேபியர்கள் மனித உருவத்தில் இருக்கும் அரக்கர்கள். அவர்கள் கடை பிடிப்பது நிச்சயமாக இஸ்லாமிய சட்ட திட்டங்கள் இல்லை. அந்த அரக்கர்களுக்கு அழிவு ரொம்ப தூரத்தில் இல்லை. அமெரிக்கா,இஸ்ரேல் போன்றவர்களின் உருவத்தில் பக்கத்திலேயே உள்ளது. அல்லாஹ் பெரியவன், நம்மைவிட நன்கு அறிந்தவன்.

    ReplyDelete
  14. சிலருக்கு நடக்கும் சம்பவம் பலருக்கு படிப்பினை என்பதை மரக்க முடியாது
    الله அவனை பொருந்திக் கொள்வானாக
    கிண்ணியா ஸாபி

    ReplyDelete
  15. சிலருக்கு நடக்கும் சம்பவம் பலருக்கு படிப்பினை என்பதை மரக்க முடியாது
    الله அவனை பொருந்திக் கொள்வானாக
    கிண்ணியா ஸாபி

    ReplyDelete
  16. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்....

    2:178 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى ۖ الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنثَىٰ بِالْأُنثَىٰ ۚ فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ اعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ

    2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

    2:179 وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

    2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.

    இதுதான் இஸ்லாத்தில் கொலைக்கான தீர்ப்பு, ஆகையால் இது பற்றி விவாதிப்பதில் எப்பிரயோசனமும் இல்லை....
    இதைப்பற்றி அன்னிய சமூகத்திடம் தெளிவுபடுத்துவது தாம் எமது கடமை....

    ReplyDelete
  17. rizanawukku walangappatta thandanaikku naam islamia shareeah wai kurai kuruwazil palanillai. unmaiyil anda kulandaiyin petror manniththirundal rizana widuthalaiyaahi iruppar. mannikkum manamatra awarkalukku naam enna seyyalaam?

    ReplyDelete
  18. hazi sonna karuthukku kandanam..kulanthain kal nenja thaikku pirahu hazii..............

    ReplyDelete

Powered by Blogger.