அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர் படகு ஜாவா கடலில் பாறையுடன் மோதியது - இருவர் பலி
(Sfm) இலங்கையர்களை கொண்ட குழுவொன்று சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் படகு செயலிழந்ததன் காரணமாக இருவர் பலியானர். சம்பவத்தில் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகில் பயணித்த இரண்டு பேர் மீட்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய ஜாவாவிற்கு அப்பால் 'நுசாகாகாம்' பங்கன் தீவில் உள்ள சிறைக் கூட காவலர்களுக்கு அவசர அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கைகளுக்கு அவர்களும் உதவியுள்ளனர்.
இந்தோனேசிய கடற்படையின் கரையோர பிரிவினரும் சிறைக் கூட காவலர்களும் இணைந்து இந்த மீட்பு பணிகளை மேற்கொண்டதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களாக கடலில் இலங்கையர்களுடன் இந்த படகு தத்தளித்து கொண்டிருந்தாகவும் இரவு வேளையிலும் துரித நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாகவே மீட்பு பணிகள் சாத்தியமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் குடிவரவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment