மனைவி அழுவதை என்னால் தாங்க முடியவில்லை..!
பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் விமானத்தில் ஏறிய பின், பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறி கீழே இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ராத் மாவட்டத்தை சேர்ந்தவர் பைசல் அலி. இவர் இத்தாலி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய நேற்று லாகூர் ஏர்போர்ட் வந்தார். போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்ப இருந்த நேரத்தில் திடீரென தனது பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறியதால் கீழே இறக்கப்பட்டார்.
அவரிடம் குடியுரிமை துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போனில் மனைவி பேசியதாகவும், தான் வெளிநாடு செல்வதால் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும் அதனால் விமானத்தில் இருந்து வெளியேற பாஸ்போர்ட்டை கிழித்து போட்டு விட்டு காணவில்லை என்று நாடகமாடியதாகவும் கூறினார். போனில் மனைவி அழுவதை என்னால் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் கிழித்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து கொண்டு பைசல் அலியை விடுவித்தனர். இதனால் ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
ithu anbu
ReplyDeleteஉண்மையான காதல்..
ReplyDelete