அல்லாஹ் கூறும் இருதயம்..!
(Faji)
விஞ்ஞானம் எல்லா முடிவுகளையும் உறுதிப்படுத்துவதில்லை. தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து வெளியிடும் விஞ்ஞானத்தின் முடிவுகள் மாற்றம் அடையும் வாய்ப்பு நிறைந்தது.
பூமி தட்டையானது என்பதில் இருந்து இன்று இன்றுவரை விஞ்ஞானமும் தன்னுடைய முடிவுகளை மாற்றிக்கொண்டு வருகிறது. இறுதியில் அதன் ஆய்வின் மூலமாக அல் குர்ஆன் காணப்படுகிறது. இறைஞானமானது நிலையானது மாற்று கருத்து ஆய்வுக்கு அப்பாற்பட்டது.
அல்லாஹ் கூறுகின்ற இருதயத்திற்கு இரண்டு பொருள் இல்லை. அது தனித்தும் திரும்ப திரும்ப வலியுறுத்தியும் கூறப்படுகின்ற உணர்ச்சிகளின் பிறப்பிடமாக இருக்கிறது.அது ஒரு உறுப்பாக குறிப்பிடப்படவில்லை. ஆன்மாவின் இயக்க சக்தியாக இருக்கிறது
"இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும் ,பார்வைப்புலண்களையும் ,இருதயங்களையும் அமைத்தான்" 32;9. இருதயத்தின் பிரதான தொழிலாக சிந்தனையும் கட்டளைகளும் செயற்படுதலுமாக இருக்கிறது. விஞ்ஞானம் கூறும் இருதயம் குருதியை பாய்ச்சுகின்ற (pumping blood) தொழிலையே செய்கின்றது. அல்லாஹ் கூறுகின்ற இருதயத்திற்கான செயற்பாடு அங்கு இல்லை.
குருதி பாய்ச்சும் உறுப்பிற்கு(blood pumping unit ) இருதயம் என்ற பொருள் அர்த்தமற்றது. இன்று மருத்துவம் கூறுகின்ற மன நோயையே அல்லாஹ் இருதய நோயாக குறிப்பிடுகின்றான். இது குணங்களின் ஆதிக்கமாக இருக்கிறது. 47:20 ,48:4, 48:18 இது போன்ற அதிகமான வசனங்கள் காணப்படுகின்றது
HEART DISEASE=MENTAL ILLNESS
HEART DISEASE >CHANGE> BLOOD PUMPING UNIT DISEASE
"யார் பரிசுத்தமான இருதயத்தை கொண்டுவருவாரோ அவர் கண்னியமடைவார் " 26:89,
"எவருடைய இருதயத்தை அல்லா விசாலமாக்கிவிட்டானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார். அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும் எவருடைய இருதயங்கள் கடினமாகிவிட்டதோ அவர்களுக்கு கேடுதான். இத்தகையோர் பகிரங்கமானவழிகேட்டில் இருக்கின்றனர் "39:22
இங்கு மனிதன் கூறும் இருதையத்தின் அளவை அதிகரிப்பது என்றா பொருள்படுகிறது. இல்லை சக்தியின் எல்லை வீச்சுகளையே குறித்து நிற்கின்றது.
சக்திகள் உருவமற்றவை ஆனால் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தப்படுவதை கொண்டு அறிய முடிகிறது. இருதயம் என்கின்ற சக்தி மையத்தில்தான் ஆன்மா இருக்கிறது.தூங்கும் போது ஆன்மாக்களை கைப்பற்றுவதாக அல்லாஹ் கூறுகின்றான். இருப்பினும் தூங்குகின்றவர் இறப்பதில்லை.ஆன்மாவின் தற்காலிக வெளியேற்றமே அது. அவன் வசமுள்ள சக்தி மீண்டும் உடலில் இணைக்கப்படுவதையே தான் நாடியோரை தூக்கத்தில் இருந்து எழுப்புவதாக அல்லாஹ் கூறுகின்றான்.
இறைவன் கூறும் இருதயம் கட்புலனுக்கு அப்பாற்பட்டது .இது உணர்ச்சிகளின் சக்தி மையமாக காணப்படுகிறது. இந்த இருதயமானது மின்,காந்தம்,ஒலி ,ஒளி ,வெப்பம் விசை போன்ற சக்திகளாக காணப்படுகிறது.
இருதயத்தின் விம்பக்கண்ணாடி நுணிமூக்கில் இருந்து நெற்றி வரை காணப்படுகிறது இது தலைப்பகுதியில் காணப்படுகிறது .இது சுவாசத்தின் மூலம் இயக்க சக்தியை பெறுகிறது .இதன் உயிர்ச்சக்தியானது பிடரியின்பகுதியில் காணப்படுகிறது .இந்த உயிர்நாடி பற்றி அல்லாஹ் கூறியுள்ளான்.
இருதயத்தின் ஒளியாக அகப்பார்வையும் புறப்பார்வையும் இருக்கிறது. 59:2 இல் அல்லாஹுவின் விழிப்பில் தெளிவாகிறது. ஒரு மனிதனின் எண்ணங்கள்,ஞாபகங்கள் ,செயல்களின் நிர்ணயம் என்பன காட்சிகளாகவும்சப்தமாகவும் விழிகளுக்கும் நெற்றிக்கும் இடையில் தோன்றுகின்றது .
ஒருமனிதனின் உணர்ச்சியின் வெளிப்பாட்டை நெற்றிப்பகுதியும் கண்களும் இணைந்காட்டுகிறது..ஒரு மனிதனின் முகத்தில் அன்பையும் வெறுப்பையும் அறியமுடியும். காமத்தையும் அறியமுடியும் ஞானத்தையும் அறியமுடியும்
இருதயம் விழிகள் ஊடாகவும்,செவிகள் ஊடாகவும் அறிவு பெற்றுக்கொள்கின்றது. செயல்களை தூண்டுவதும் வடிவமைப்பதும் பார்வையாகும்.
செயல்களில் முந்தியது பார்வையாகும். ஒரு பொருளின்மீது அல்லது நிகழ்வின் மீது பார்வை முதலில் தாக்கம் செலுத்துகிறது. இதன் பின்னரே அது தொடபான முடிவுகள் இருதயத்தில் தோன்றுகின்றது
உலகத்தை நேசிப்பவன் புறப்பார்வையின் ஆதிகத்துக்கு உட்பட்டவன் இது வயிற்றைபற்றியும் உடலைப்பற்றியும் சிந்திக்க தூண்டும். இவன் மார்க்கம் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையிலானது. அல்லாஹுவை நேசிக்கின்றவன் அகப்பார்வையும் புறப்பார்வையும் இணைந்த ஒளியால் சிந்திக்கின்றான்
இவனுடைய நெற்றித்திரையில் எச்சரிக்கை வசனங்களும் ,நன்மையை தூண்டும்வசனங்களும் காணப்படும். ஒருகனணி தன்மீதான வைரஸ் தாக்கத்தை திரையில் காட்டுவதுபோல் தீய செயலை அகப்பார்வை எச்சரிக்கின்றது
பாவத்தின்பால் எச்சரிக்கை வசனங்களும், நன்மையின்பால் ஆர்வமூட்டும் வசனங்களும் நெற்றித்திரையில் சதா ஓடிக்கொண்டே இருக்கும். இறைவிசுவாசிகள் கற்றுக்கொண்ட வேதம் பார்வைகளால் சிந்திக்கப்படுகிறது
"மகத்தான என் இரட்சகன் தூய்மையானவன்" என்றும் ஒருபடி மேலே போய் "மிக்க உயர்ந்தவனான என் இரட்சகன் தூய்மையானவன் "என்றும் இருதயம் சரணாகதி அடைவதில் இன்பத்தை காணுகின்றது. இங்கு ஏகத்துவம் விழிகளுக்குள் எழுதப்படுள்ளது
"குற்றவாளிகள் தங்கள் முக அடையாளங்களை கொண்டே அறியப்படுவார் அப்போது முன் நெற்றி ரோமங்களும் பின்னங்கால்களும் கொண்டு பிடிக்கப்படுவர் " 55:41
"அவன் விலகிக்கொள்ளவில்லையானால் நிச்சயமாக நாம் அவனுடைய முன் நெற்றி ரோமத்தை பிடித்து அவனை இழுப்போம்" 96:15
"தவறிழைத்து பொய்யுரைக்கும் முன் நெற்றி ரோமத்தை" 96:16
Post a Comment