Header Ads



றிசானா நபீக்கின் மரண தண்டனையை கண்டிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்..!


ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டம் வெளியிட்டுள்ளது. 

ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது. 

ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை கேட்டு தான் உண்மையில் கலக்கமுற்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பொறுப்பு தலைமை அதிகாரி கெத்தரின் ஏஸ்டன் தெரிவித்துள்ளார். 

ரிசானாவை மரண தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் பல தடவைகள் சவுதி அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாக கெத்தரின் ஏஸ்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொலை குற்றம் இடம்பெற்ற வேளையில் ரிசானா ஒரு சிறிய பெண் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ரிசானாவின் மரணத்திற்காக அவரது குடும்பத்தினருக்கு, குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கும் அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ரிசானாவின் மரணத்தால் குழந்தையின் பெற்றோரின் இழப்பு குறைக்கப்படும் என தான் நம்பவில்லை எனவும் கெத்தரின் ஏஸ்டன் குறிப்பிட்டுள்ளார். 

மரண தண்டனை விதிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் உலகளாவிய ரீதியில் எதிர்ப்பதோடு, மரண தண்டனை மனித வாழ்வின் ஒரு முடியாத இழப்பை பிரதிபலிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பொறுப்பு தலைமை அதிகாரி கெத்தரின் ஏஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார். 

The European Union expressed dismay Thursday that Saudi Arabia had beheaded a Sri Lankan maid convicted of murdering her employer’s baby, despite repeated appeals for a stay of execution.

“I am deeply dismayed by the information that Sri Lankan national Ms Rizana Nafeek was executed,” EU foreign affairs head Catherine Ashton said in a statement.

“On numerous occasions, the EU had called for the execution to be commuted and had asked the authorities to exercise all their powers in order to grant her relief from the death penalty,” Ashton said.

The maid “was most probably a minor at the time of the crime,” she added.

Nafeek was executed Wednesday after she was found guilty of smothering the baby following an argument with the child’s mother, her employer, the Saudi interior ministry said in a statement carried by the official SPA news agency.

Human rights groups said Nafeek was 17 at the time of the offence and that Saudi Arabia was one of just three countries in the world to impose the death penalty for crimes committed as a minor.

“I recognise the serious nature of the crime involved and express my sincere sympathy to the family of the victim. However, I do not believe that their loss has been mitigated by Nafeek’s death,” Ashton said.

“The EU opposes the use of capital punishment in all cases and under all circumstances and calls for a global moratorium as a first step towards its universal abolition.

“Capital punishment represents an irreversible loss of human life,” she said, AFP reports.

3 comments:

  1. தயவு செய்து பெண்களை வேலை வாய்புக்காக சஊதி நாட்டுக்கு அனுப்ப வேன்டாம், நமது அரசாங்கம் ஒரு முடிவு எடுக்க வேன்டும் கன்மூடித்தனமான இந்த தீர்ப்பு உன்மையாது அல்ல .

    ReplyDelete
  2. نحن مسلمين لا نتكلم عن الخطأ في الشريعة والله أحكم الحاكمين

    ReplyDelete

Powered by Blogger.