Header Ads



ஒழிந்திருக்கவும் வேண்டாம்..! ஓய்வெடுக்கவும் வேண்டாம்..!!


(பாஹிர்)

இனிய இஸ்லாமிய சகோதர்களே..!

இனியும் ஒழிந்திருக்க வேண்டாம் ஒதுங்கிக்கொண்டவர்கள் ஓய்வெடுக்கவும் வேண்டாம். உழைத்துக்கொண்டிருப்பவர்கள், நாம் ஒருவர் என்று வாழ்ந்தோம். நமக்கு ஒருவர். பின்னர் நமக்காக பலர். என்று பரவிச்சென்று விட்டோம்.

ஆகையினால் இன்று நமக்கு இந்த நிலை..

1971ல் 19 வீதமாக இருந்த நாம். இன்று 40 வீதம் என்ற வேக வளர்ச்சியின் காரணமாக சமகாலத்தில் நமக்கெதிராக நமது புனித மார்க்கத்திற்கெதிராக  அவர்களின் அடக்கு முறை அரங்கேறிக்கொண்டிருப்பதினை அனைவேரும் அவதானிக்கின்ற விடயங்களாகும். இவர்களுடைய இந்த திட்மிட்ட சதியானது அன்று அவ்வப்போது சிறு சம்பவத்தினைத்தான் காணமுடிந்தது. ஆனால் இன்று எமது வீத வேகத்தை விடவும் அவர்களுடைய  திட்டமிட்டப்பட்ட கருவறுக்கும் செயற்பாடுகள் முந்திக்கொண்டு சென்று விட்டது.

அந்தடிப்படையில் சென்ற 2012ல் நிகழ்ச்சிகள் பல..

1. தம்புள்ள ஹைராத் பள்ளி தாக்குதல் - 20.04.2012

2. தமபகம அல் அக்ரம் பள்ளி தாக்குதல் - 25.07.2012 (மற்றும் அதே காலப்பகுதிகளில் தெகிவளை ராஜகிரி அநுராதபுரம் போன்ற பிரதேசத்தின் பள்ளிவாயல்கள் தாக்ககுதல்)

3. பங்களாதேஷ்சில் புத்தர் சிலை தாக்கப்பட்டதன் காரணமாக இலங்கையில் முஸ்லிமகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம். - 05.10.2012

4.பதுளையில் புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட  கையுறை விற்றதாக போலி நாடகம். இதை ஒட்டி பதுளையில் பேரணி - 23.11.2012 அதன் பிறகு அது சம்மந்தமாக  இனவாத பௌத்தர்கள்  ஒன்று சேர்ந்து பாரிய ஒன்று கூடல் - 30.11.2012

5. பிலியந்தளவில் முஸ்லிம்களுக்கு  பூர்வீக பூமி இல்லை. என்று  பாரிய ஆர்ப்பாட்டம் - 22.12.2012

6. குருநாகல் எதுகல்புர விகாரையில் கண்டனக்கூட்டமும் முஸ்லிம்களுக்கு எதிரான பல நோட்டிஸ்களும் - 16.12.2012

7. கண்டியில்  முஸ்களின்  கடையில் பொருட்கள் வாங்காதீர்கள் என்ற துண்டுப்பிரசுரம் - 08.12.2012

8.மஹியங்கணையில் பள்ளியை நிறுத்துவாயா..? அல்லது நாம் நிறுத்தட்டுமா..? என்ற கருத்தை சுமந்த சுவரொட்டிகள் 22.12.2012

9. பதுளையில் முஸ்லிகளை தரக்குறைவாக வர்ணித்து பிரசுரம்  5 பக்கங்களை கொண்டது.

10. எம்பிலிபிட்டியவில் ஜாதிக ஹெல உருமையினரால் ஹலால் சான்றிதழை இரத்துச் செய்யக்கோரி ஹலால் உணவு பகிஷ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் 24.12.2012

11.ஹலால் சான்றிதழை கண்டித்து 'பொது பல சேனாவினால்' ஊடகவியலளார் மாநாடு நடத்தப்பட்டது. 31.12.2012

12. பாராளுமன்றத்தில் உணவகத்தில் பன்றி இறைச்சி சமைக்கப்பட வேண்டும். என்ற மூலத்தை ஐ.தே.க. ஜோன் அமரதுங்கவினால் மொழியப்பட்டு. அதனை அதே கட்சி ரஞ்சன் ராமநாயக்கவினால் கேலிசெய்து இஸ்லாமிய சட்டம் காட்டு மிராண்டித்தனமானது. என்று விடுத்த அறிக்கை. 

13. இஸ்ரேலுக்கு இலங்கை தூதுவரை உத்தியோகபூர்வமாக நியமித்தது. 

இவ்வாறு பல நிகழ்ச்சிகள் அரங்கேரிக்கொண்டிருப்பது எதனை உணர்த்துகின்றது..? 

இந்த கருவறுப்புக்கள் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தினை கொடுக்கப்போகின்றது..?

அதனால் ஏற்படும் விழைவுகள் எவ்வாறு அமையும்..? என்பதெல்லாம் நாம் தெரிந்து கொள்ளாமலுமில்லை. அவ்வாறு உண்மைகள் உணரப்பட்டும் உள்வாங்கப்பட்டிருந்தும். அதற்கான எந்த நடவடிக்கையும் எவராலும் எடுத்ததாக தெரியவில்லை.

மாற்றமாக உணர்வுகள் உணர்ச்சிகள் என்ற வெறும் பேச்சுகளில் மாத்திரம் நின்றுவிடுகின்ற ஒரு அசாதாரண நிலமையை எமது சமூகத்திலுள்ள பல தரப்பட்ட மட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது. அதில் அரசியல் தலமைகளும் விதிவிலக்காக இல்லை.

நிகழக்கூடிய சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பவர்களாகவும். சிலர் பெட்டிப்பாம்பு போன்று அடங்கிக்கிடப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். எனவே அவர்களுடைய இவ்வாறான சுயநல அரசியல் நகர்வு. ஆட்சியாளர்களின் பேரினவாதிகளின் காய்நகர்த்தலாக அமைவதுடன். அதனால் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய சட்டத்திற்கும் பொறியாக அமைந்து விடுவதை  கடந்தகால நிகழ்வுகள் அழகாக படம் பிடித்துக் காட்டப்படுகின்றது. இது அரசியல் தலமைகளின் கொள்கையாக உள்ளது. 

மற்றது சமூகத்தை பற்றி சிந்திக்கின்ற சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் நிலைப்பாட்டினை அவதானித்தால். அங்கும் நெழிவுகள் வலைவுகள் இருக்கத்தான் செய்கின்றது. சமூகத்திற்கெதிரான கறுவருப்புகள் கட்டவிழ்தப்படுகின்ற பொழுது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற  போது இடையில் அதனை நிறுத்திக்கொள்கின்ற நிலைப்பாட்டினையும் அவர்களிடத்தில் அவதானிக்க முடியும்.

இவ்வாறு ஒரு நிலைகொலைந்த நிலைப்பாட்டினைதான் எமது சமூகம் கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறான  நிலைப்பாட்டினை தொடர்கதையாக எடுத்துக்கொண்டால். சமகாலத்தில் அந்தச்சவால்களை முறியடிக்கா விட்டால். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எதர்காலத்தில் என்று சொல்வதை விட  சொற்ப காலத்துக்குள் அதனுடைய விழைவுகளை சந்தித்தே ஆகே வேண்டிவரும் என்பதில் ஐயமில்லை.

அதனைக்கருதி நாம் எமது எதிர்கால சந்ததியினர்களுக்கு பாரிய சுமையையோ..! கறைபடிந்த வரலாற்றுத்தறினையோ..! செய்துவிடாது. அவர்களுடைய திட்டமிட்ட சதிகளை முறியடிக்கவல்ல.. எந்த அற்ப நலன்களையும் கவனம் கொள்ளாது. உறுதிகான நிலைப்பாடும்.. திடமான நம்பிக்கையுடனும் எமது செயற்பாடுகள் அமையப்பெற வேண்டும். என்பதனை கவனத்தில்கொண்டு ஒவ்வொரு இஸ்லாமிய சகோதர்களும் தயாராக வேண்டும்.

அதற்காக சில சிந்தனை..

1.எமக்கெதிராக அரங்கேற்ப்படுகின்றவைகள்  அனைத்தும் பேரினவாதிகளின் ஆட்சியிலும் அவர்களின் வழிநடாத்தலுமாக இருப்பதால். அதிகமான எமது அரசியல் தலமைகள் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் நடாத்துவதால். அவர்களின் சதிகளை முறியடிப்பது என்பது சாத்தியமாகாத ஒரு விடயம். உரிமைபெற்றுக்கொள்ளலாம் என்று இறுதியாக இணைந்து கொண்டவர்களும். அபிவருத்தி செய்ய வேண்டும் என்று அன்று சேர்ந்தவர்களும். எதிர்க்கட்சிகளிலும் மற்றும் ஏனை கட்சிகளிலும் இருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலமைகள் ஏதோ ஒரு கட்சியில் ஒரே அடிப்டை கொள்கையின் கீழ் ஒன்றினைவது காலத்தின் தேவையும் சவால்களை முறியடிக்கும் சக்தியுமாகும். அதற்காக முயற்ச்சி செய்தல்.

2.சமூகத்தில் இயக்கங்களாகும் இஸ்லாமிய அமைப்புக்களாகவும் இயங்குகின்றவர்கள். எமக்கெதிரான சவால்களை முறியடிக்க புறப்பட வேண்டும். அந்த போராட்டத்தை நடாத்துகின்ற போது இடையில் அதனை நிறுத்திக்கொள்ளக்கூடாது. அதாவது அப்போராட்டம் அவர்களை தாக்கம் செலுத்துகின்ற போது அவர்களின் ஆதிக்கம் மேலோங்கிச் செல்லலாம். அல்லது அவர்களால் துண்புறுத்தப்படலாம். அல்லது இயக்கத்தின் நிருவாக கட்டமைப்பை முடக்க முற்படலாம். அதனால் நிதிகளுக்கு ஆபத்து வந்துவிடும்  என்றும் உயிர்களுக்கு ஆபத்து நேரிடும் என்றும் பின்வாங்காமல் நிலையாகவும் உறுதியாகவும் பயணிக்கின்ற சக்தியாக செயற்பட வேண்டும்.

இவ்வாறு அதிகாரமிக்க சக்தியான அரசியல் சக்தியும் பல  இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு இயக்கமாகவும் களத்தில் இறங்குகின்ற பொழுது.. இன்ஷா அல்லாஹ் நிச்சம் அவர்களை ஆட்டம் காணவைக்க முடியும். அவர்களின் எந்த சக்தியையும் எதிர்கொண்டு துடைத்தெரிய முடியும். என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. 

எனவே அதற்காக சகல பங்களிப்பை என்னால் தரமுடியும் என்பதை இதனூடாக தெரியப்படுத்துவதுடன். அதற்காக சகல சகோதர்களின் பங்களிப்பிணை வேண்டிக்கொள்கின்றேன். குறிப்பாக புலம்பெயர் சமூகம் அதற்கு வழிவகுக்கும்  சக்தியாக மாறவேண்டும். அது அந்த நடவடிக்கைக்கு உரமூட்டும் சக்தியாக அமையும் என்பது எங்களது பங்களிப்பின் ஊடாகத்தான் சாத்தியமாக இருக்கும்.

பங்காளியாக சேறும் போது அந்த நடவடிக்கைக்கு மெருகூட்டக்கூடிய சக்தியாக திகழும். என்பது புலம்பெயர்ந்தோரின் நகர்வைப் பொருத்தே அமையும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.

எனவே அதற்காக செயற்படும் ஈமானிய உணர்வாளர்கள். சமூக சிந்தனை வாதிகள் சகல சகோதர்களும் ஒன்று சேர்ந்து கருத்துக்களை பதிவு செய்து செயற்படுவதற்கான அழைப்பினை இதனூடாக அறிவிப்பு விடுக்கின்றேன்.







14 comments:

  1. good article but muslim percentage is given above wrong yes this is the time we have to unit and pray allaha we have be ready for everything 1st we all heve to be raeal muslim 100% 5 times praying people then only inshaalla we can get help from alla as it on badr

    ReplyDelete
  2. இன்ஷாஹ் அல்லாஹ் இலங்கை முஸ்லிம்கள் தூங்கமாட்டார்ககள் நமக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் வேண்டும் நாமும் போராட வேண்டியது காலத்தின் கட்டாய தேவை. இல்லாவிட்டால் நமது பாதுகாப்பு ?

    ReplyDelete
  3. உண்மையில் இப்படியான ஒரு கூட்டு இணைப்பு எம் மக்கள் வரவேண்டும் அப்படி ஒன்று சேர்ந்தால்தான் இஸ்லாத்தையும் இலங்கை முஸ்லிம்களையும் காப்பாற்ற முடியும் .....இதுதான் ஒரே ஒரு வழி ..ஆனால் உங்கள் முன் கருத்து போல இப்படியான கூட்டு இணைப்புக்கு தற்போது உள்ள முஸ்லீம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கும் எல்லா முஸ்லீம் அரசியல் சகோதரரும் வருவார்களா ? அவர்கள் திருந்தி வந்தாலும் மற்றவர்கள் விடுவார்களா ? எமது எல்லா ஊர்களிலும் உள்ள முஸ்லிம்கள் தற்போது அவர்கள் சார்ந்து உள்ள முக்கிய அரசியல் காட்சிகளில் இருந்து விலகி ஒன்று பட்ட ஒரு கூட்டு இணைப்பு முஸ்லீம் சார்ந்த கூட்டமைப்புக்கு வருவார்களா ? அப்படி வருவதற்கு என்ன வழி உள்ளது ?இப்படி பல சிக்கல்களில் எமது முஸ்லிம்கள் சார்ந்து உள்ளனர் .

    முக்கியமாக இப்படி ஒரு முஸ்லீம் கூட்டனி உருவாக்கப்பட்டால் அதற்கு வரும் தலைவன் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முழு உலகையும் ஆண்ட கலிபாக்கள் மாதிரி உலக ஆசை இல்லாத ஒருவராக இருப்பாரா ?
    100% இல்லாவிட்டாலும் 50% மாவது உள்ள ஒருவர் வருவாரா ? ஏன் எனில் இதவரை வந்த முஸ்லீம் தலைவர்கள் எல்லாரும் எதோ ஒருவகையில் பணதுக்கும் பதவிக்கும் சோரம் போனவர்கலாகவே உள்ளனர். அனால் அதற்கு பல பல்லவி விளக்கம் மட்டும் ஆமை வேகத்தில் கொடுப்பார்கள் ....

    ஆனால் கட்டாயம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்று சேர்த்த ஒரு முஸ்லீம் கூட்டணி கட்டாயம் அவசியம். அதற்கான முதற்க்கட்ட வேலைகளை இப்போது இருந்தே தொடங்க வேண்டும். இல்லை எனில் பர்மா நாட்டு முஸ்லிம்கள் படும் துன்பங்களை போல இலங்கை முஸ்லிம்களும் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
    யாஹ் அல்லாஹ் எம் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று படக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தருள்வாயாக .
    இதில் ஏதும் வாக்கிய பிழைகள் மற்றும் யாருக்காவது மனது துன்படகூடிய சொற்கள் இருந்தால் பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறாரு வேண்டுகின்றேன்
    இஷாக்

    ReplyDelete
  4. அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அகபர் யா அல்லாஹ் இந்த சஹோதரர் உடைய முயச்சின் மூலம் எங்களை ஒன்று சேர்த்து வெற்றி யும் நிம்மதியும் பெர செய்வாயாக
    இன்னும் வெளிநாடில் உள்ள சகோதரர் கள் ஒரு பெரிய சக்தியாக் ஒன்றினை க முயசிப்பது காலத்தின் தேவய்

    ReplyDelete
  5. masha allah kalathin thewaiki addra oru kaddurai
    NANUM ONKALUDAN ,,,,,,,,,,,,

    ReplyDelete
  6. We everyone must learn Islam perfectly and practice as it guides us.
    This only way makes us strong and through that to beat their hearts.
    Mahibal M. Fassy

    ReplyDelete
  7. அல்லாஹ் உங்கள் எண்ணத்தை தூமைப்படுத்தி அதில் உறுதியோடு இருக்க உதவி செய்யவேண்டும். "யார் ஒரு நல்ல காரியத்துக்கு வழி காட்டுகிறாரோ அவருக்கு அதற்கான நன்மையும் அதை தொடர்ந்து செய்பர்களது நன்மையும் கிடைக்கும் " என்பது ஹதீஸ் இந்த நல்ல விடயத்தை இப்படியே ஊடங்கள் ஊடாக மட்டும் பேசாது ஒரு வலயமைப்பை உருவாக்கி அதில் சற்று தீவிரமாக ஆராய வேண்டும் அதற்கு ஏதாவது குரூப் ஐடி ஏதும் தயார் செய்ய முடியுமா சகோதரர் பாஹிம்?

    ReplyDelete
  8. Super .sinthiga vendiyathuthan

    ReplyDelete
  9. வெளிநாடுகளில் இருக்கும் நாங்கள் இதற்காக என்ன செய்ய வேண்டும் ஒரு நேர்மையான தலைமையின் எம்மால் ஆன பங்களிப்பை நாம் செய்யத் தயாராக உள்ளோம்

    ReplyDelete
  10. THE SLMC HEADS SHOULD RESPONSE THE CONFLICT. BECAUSE THEY SPREAD THE CIVILIZED DIFFERENT BETWEEN SINHALESE AND MUSLIMS FOR THEIR VOTING MOTIVE.THIS IS A TRUTH ! WE CREATED AND EXPERIENCING NEGATIVELY.

    ReplyDelete
  11. முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என சொல்லிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் தலைவர்களை விரட்டியடிப்போம் நிச்சயம் நமக்கு ஒரு விடிவு கிடைக்கும். பிரதேச வாதங்களை கழைந்துவிட்டு, கட்சி யாப்புக்களை எரித்துவிட்டு திருக்குரானில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் தலைமையை தெரிவுசெய்வோம்

    ReplyDelete
  12. கட்டாயமாக இந்த வேலையை யாராவது முன் நின்று செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் தூங்கி விடுவார்கள்.கடைசியில் பர்மிய முஸ்லிம்களுக்கு நடந்தது போல் ஆஹிவிடும் அல்லாஹ் பாதுகாப்பான்.மேலும் அதிகமான முஸ்லிம் கிராமங்களில் இலங்கையில் இன்று நடக்கின்ற இன சுத்திகரிப்பு விடயம் தெரியது.இதனை எல்லா முஸ்லிம் ஊர்களுக்கும் முதலில் தெரியப்படுத்த வேண்டும்.ஒழுங்கான கட்டமைப்புள்ள இயக்கமாக இதனை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.எல்லோரும் முன்னிப்போம்.இறைவன் துணை நிப்பான்.ஆமீன்.

    ReplyDelete
  13. குறிப்பாக இதனை முன்னெடுக்கும் போது ஜமிய்யதுள் உலமா போன்ற நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டு செல்ல வேண்டும். எமக்கு எல்லா பக்கத்தாலும் உதவி வேண்டும்.மற்றும் கல்வி மான்கள்......இன்னும் .....சேர்ந்து இறங்க வேண்டும்.அல்லாஹ் துணை .ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.