'முஸ்லிம்கள் கழுதைகள், சிங்களவர்கள் பன்றிகள்' - வர்ணிக்கிறது தமிழ் ஊடகம்..!
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் பௌத்தசிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரமடைந்திருக்கும் நிலையில் சில தமிழ் இணைய ஊடகங்கள் இதில் குளிர்காய முயலுவதை அவதானிக்கமுடிகிறது.
குளியாப்பிட்டியில் நேற்று பௌத்தசிங்கள இனவாதிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை ஒரு தமிழ் இணையம் ஊடகம் அறிக்கையிடும் முறை இதோ.
குருநாகல், குளியாப்பிட்டி நகரில் புத்த பிக்குகள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பன்றி உருவத்தில் அல்லாவின் பெயரை எழுதிய பதாகைகளை தாக்கி சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 புத்த பிக்குகள் கலந்து கொண்டனர். குருநாகலில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதை தடுக்க வேண்டும் என கோரியே புத்த பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் பன்றிகளுக்கும் களுதைகளுக்கும் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மோதல்களின் ஒரு கட்டமாகவே இது நடைபெற்றுள்ளது.
அதேவேளை மற்றுமொரு தமிழ் இணையம் இவ்வாறு செய்தியொன்றுக்கு தலைப்பிட்டுள்ளது
''ஒழுக்கம் கெட்ட முஸ்லிம்களை போல தமக்கும் 5 பொண்டாட்டி வேண்டும் என்கிறார் தேரர்''
சில தமிழ் இணைய ஊடகங்களனி இவ்வாறு செய்திகளை வெளியிடுவது கவலைதரும் விடமென்பது ஒருபக்கமிருக்க தமிழ் இணைய ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளுக்கு பின்னூட்டம் பதியும் நமது முஸ்லிம்களின் நிலையோ இன்னும் பரிதாபகரமானது.
நமது முஸ்லிம் சகோதரர்கள் பதிவிடும் சில பின்னூட்டங்களுக்கு சில தமிழ் சகோதரர்கள் பின்னூட்டம் பதியும்போது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் முழுக்கமுழுக்க அசிங்கப்படுத்தியே பின்னூட்டங்களை பதிவிடுகின்றனர்.
இங்கு அந்த தமிழ் சகோதரர்களை குற்றம் சொல்லி அர்த்தமில்லை. அங்கு பின்னூட்டம் பதியும் நமது முஸ்லிம்களினதும், அவ்வாறான பின்னூட்டங்களுக்கு ஊடக தர்மங்களை மீறி இடம்கொடுக்கும் தமிழ் ஊடக நிர்வாகத்தினரினதும் தவறுதான் இவை.
தமிழ் இணைய ஊடக பேஸ்புக் பக்கங்களை அலங்கரிக்கும் நமது முஸ்லிம்கள் இதுவெல்லாவற்றையும் எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. இதில் மகா வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம் விவகாரம் குறித்து அடிக்கடி பேசும் அல்லது எழுதும், இல்லையேல் கூட்டங்களை நடாத்தும் சில முஸ்லிம் சகோதரர்களும் அவ்வாறான தமிழ் இணைய ஊடக பேஸ்புக் பக்கத்தில் இடம்பிடித்திருப்பதுதான்.
முஸ்லிம் சகோதரர்களே...!
இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும், முஸ்லிம்களை அவமானப்படுத்தும் இவ்வாறான சில தமிழ் ஊடகங்களை நீங்கள் பார்வையிட்டு, அந்த பேஸ்புக் பக்கத்தை லைக் Like செய்வதன் மூலம் அந்த சில தமிழ் ஊடகங்களின் வளர்ச்சிக்கு நீங்கள் உதவுகிறீர்கள். உங்களை விற்றுத்தான் அவர்கள் விளம்பரம் பெறுகிறார்கள்.
இஸ்லாத்தை அசிங்கப்படுத்தி, முஸ்லிம்களை புண்படுத்தி செய்தி வெளியிடும், மிக மோசமான முஸ்லிம் விரோத பின்னூட்டம் பதிய அனுமதிக்கும் இவ்வாறான தமிழ் ஊடகங்களுக்கு நீங்கள் துணை புரிவதே பெரும் பாவத்திற்குரிய செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..!
இவன் இஸ்லாமிய சகோதரன் முஜாஹித்..!
தமிழர்களின் ஒழுக்கம்தான் பாக்கிறோமே யாழ்ப்பாணத்திலும்,மேதகு நாடுகளிலும் இந்த லட்ச்சனத்தில் இணையம் வேறு. எங்கு பார்த்தாலும் பதிலளிப்போம்...
ReplyDeletemr.EDITOR,
ReplyDeletePLEASE PUBLISH HERE WHAT THE MUSLIM BROTHERS COMMENTS IN WEBSITES IN TAMI OR GIVE THE LINK .. WE CAN READ. AND ADVISE OUR BROHTERS....L..
அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் எழுதிக்கொள்வது.. இது சிங்கள அரசின் கைக்கூலிகளாக இருக்கும் ஒருசில ஊடகங்களூடாக தமிழர் முஸ்லிங்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் முயற்சியே இது. அதேபோல பின்னூட்டங்கள் பதியும் போது எமது நண்பர்களுக்கு எவ்வித மன உளைச்சல் இல்லதவகையில் பதிவிடுவது எமது மரியதையை தானாகவே அதிகரிக்கும்.
ReplyDelete