கல்முனை கடற்கரையில் ஜனாஸா மீட்பு
(Tm) கல்முனையில் கரையொதுங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கல்முனை விஹாரைக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலேயே பெண்ணொருவரின் சடலம் இன்றுக்காலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் காணாமல் போன 34 வயதான ஆதம்பாவா ரிசானா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர் கல்முனை 3 ஆம் பிரிவைச்சேர்ந்தவர் என்று தெரிவித்த கல்முனை பொலிஸார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment