Header Ads



இலங்கையின் சந்திர வட்டகல் லண்டனிலிருந்து திரும்பிவருமா..?


இங்கிலாந்தின் லண்டனில் ஏல விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சந்திர வட்டக்கல்லை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இன்டர்போல் எனப்படுகின்ற சர்வதேச பொலிஸாரி்ன் ஒத்துழைப்புக்கான பெற்றுக் கொள்ளவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணைகளிலிருந்து இந்த சந்திர வடடக்கல் அநுராதபுர காலத்திற்கு சொந்தமானதென உறுதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர வட்டக்கல் எதிர்வரும் 23 ஆம் திகதி லண்டனில் நடைபெறுகின்ற ஏல விற்பனையில் வைக்கப்படவுள்ளமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திர வட்டக்கல் தொடர்பான தகவல்களை சேகரிக்குமாறு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த கல் 1950 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த  சந்திர வட்டக்கல் சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டிருக்குமாயின் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அதனை மீண்டும் இலங்கைக்கு வர முடியாது என அவர் சுட்டிக்காட்டுகிறார். sfm
  

No comments

Powered by Blogger.