அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவுச்சங்க விவகாரம் - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் தவிசாளருடைய பதவி இராஜினாமா தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்தை பணித்துள்ளார்.
அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் கடந்த காலம் தொட்டு இடம்பெற்றுவரும் முறைகேடுகள், வெளியாட்களின் தலையீடுகள் சம்மந்தமாகவும், 2012ம் ஆண்டு அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தவிசாளராக கடமையாற்றி வந்த எம்.ஐ.முஸ்தபா கடந்த 16ம் திகதி இராஜினாமா செய்துள்ளது தொடர்பாகவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூகசேவைகள், சிறுவர் நன்னடத்தை, விளையாட்டுத்துறை, கூட்டுறவு அபிவிருத்தி, இளைஞர் மற்றும் மகளிர் விவகார, தகவல் தொழில்நுட்ப மற்றும் விநியோக அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளார்.
Post a Comment