Header Ads



உலமா சபையின் அதிரடி - உண்மையைக் கண்டறிய வரும்படி பாதுகாப்பு அமைச்சுக்கு அழைப்பு



ஹலால் சான்றிதழ் நிதி பாவனை தொடர்பில் பொதுபல சேனா வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாகத் தமது அலுவலகத்துக்கு வந்து விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு உலமா சபை தேசிய புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுக்கத் தீர்மானித்துள்ளது.
 
விசாரணையின் பின்னர் உண்மை நிலைமையை அரச மேலிடத்தின் ஊடாக சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் உலமா சபை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது. 
 
அத்தோடு, இப்பிரச்சினையைப் பூதாகரமாக்கும் பொதுபல சேனா அமைப்பைச் சந்தித்து அவர்களுக்கு உண்மையை ஆதாரங்களுடன் விளக்குவதற்கான ஏற்பாட்டிலும் உலமா சபையின் ஹலால் சான்றிதழ் பிரிவு ஈடுபட்டுள்ளது.
 
தமது கணக்கறிக்கைகள் மிகவும் தெளிவாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளன என்று தெரிவித்திருக்கும் உலமா சபை,  மக்கள் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக எவர் வேண்டுமானாலும் அந்த அறிக்கைகளை ஊடகங்களில் பிரசுரிக்க முடியும் என்று வெளிப்படையான அறிவித்தல் ஒன்றையும் உலமா சபை விடுத்துள்ளது.
 
ஹலால் சான்றிதழ்கள் மூலம் உலமா சபைக்கு வருடந்தோறும் 90 கோடி ரூபா கிடைக்கின்றது என்றும் அந்தநிதி வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறதா என்றும் அரசு உடன் விசாரணை நடத்தவேண்டும் என்றும் பொது பலசேனா நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தது. 
 
இந்நிலையில், ஹலால் சான்றிதழ் தொடர்பாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தொடர்பாகவும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை நீக்குவதற்காக உலமா சபை கடந்த வாரம் விடியோ மூலமான விளக்கமொன்றை வழங்கியது. 
 
இதனைத் தொடர்ந்து மேலும் தெளிவாக்கலை வழங்கி ஹலால் சான்றிதழ் தொடர்பான சிங்கள மக்களின் தப்பெண்ணத்தை அடியோடு வேறருக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு, தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை பரந்துபட்ட விசாரணையை மேற்கொள்வதற்கான கதவை உலமா சபை திறந்துள்ளது. 
 
இதில் முக்கியமாக விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவினரின் ஊடாகவும், அரச மேல்மட்டத்தின் ஊடாகவும் ஆதாரத்துடன் சிங்கள மக்களுக்கு உண்மைநிலையைத் தெரிவிக்கும் முயற்சியில் உலமா சபை இறங்கியுள்ளது.  (உதயன் பத்திரிகை)

 
  

17 comments:

  1. yes yes that's we wants unmaiyai ilankai ariya veendum poli pirachcharam seyyum podu pala sena boru bala sena vin poli yai niroopikka vendum

    ReplyDelete
  2. அது மட்டும் போதாது இந்த பொதுபல சென என்ற அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.

    ReplyDelete
  3. mash allah very good decision.

    ReplyDelete
  4. muthalil mubarak moulavi ponra pachchonthihlin(ettapparhalin)vaikku sirantha pathil kodukkavedum.

    ReplyDelete
  5. ippodaiku niroofithal mattum podhum, veen walakku wambu wendam...

    ReplyDelete
  6. alhamthulillah allah nam pakkam iruppan epphothum.kadaiyarhalin kaihal kattappada vendum,vai moodappada vandum.

    iraiva engalukku thunai purivayaha-.............................

    ReplyDelete
  7. i think better same time call to bodu bala sana &show what is the truth

    ReplyDelete
  8. இஸ்லாத்தைப் பற்றிய உண்மைகளை உலகத்தில் உள்ள மூளை முடுக்குகளுக்கு எல்லாம் கொண்டு செல்ல வைக்கிறான் அல்லாஹ். அனைவரது மனதிலும் இஸ்லாம் பற்றிய நல்ல என்னத்தை உண்டாக்கி அவர்களை நேர்வழியில் வர, எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்..

    ReplyDelete
  9. அல்ஹம்துலில்லாஹ்!

    நல்ல முடிவு. அரசு அழைப்பை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைகள் எப்போதும் மறைந்து போவதில்லை. அசத்தியம்தான் அழிந்து போகும். ஆக்கபூர்வமாகவும் புத்திசாலித்தனமாகவும் இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தினால் இது கால வரை பெரும்பான்மைச் சமூகத்துக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லாமல் இருந்த எமது பாவங்கள் மன்னிக்கப்படலாம். இனிமேல் அழகான முறையில் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன, அது காட்டும் வாழ்க்கை வழிமுறை என்ன, என்பதை எடுத்துச் சொல்ல கதவுகளைத் திறந்து கொள்ள இதுதான் சந்தர்ப்பம். மீண்டும் தூங்கி விடாமல் இருப்போம். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நல்வழி காட்டுவான்.

    ReplyDelete
  10. It's a good move and checkmate for rumours.

    ReplyDelete
  11. After the the decision we would like to request from the government to avoid Or remove the parties of the podu pale sena from the political parties and they are the one trouble and problem maker in country in between the innocent people during the election period. please lets put hand together the to throw out and remove their political power in order to keep Sri Lanka peace & merciful country forever.
    Lets puts hands together to developed the country not to destroy by troubles.

    I hope the good human being in sri lanka will put hands together.

    ReplyDelete
  12. its much batter but after explanation they should understand so it can be happen ..........?????

    ReplyDelete
  13. THIS IS THE GOOD OPPORTUNITY TO EXPLAIN THE TRUTH TO NON MUSLIMS AND WHAT IS ISLAM AND WHY MUSLIMS DO NOT HAVE HARAAM. PLEASE MY SINCERE REQUEST TO ACJU TO PUBLISH THIS HOLY THINGS OF RELIGION VIA SINHALA MEDIAS.

    THANKING YOU,
    YOURS SINCERELY,

    MMM AHSAN.

    ReplyDelete
  14. மாஷா அல்லாஹ்.. நல்ல முடிவு.. இது இலங்கை வாழ் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் பரிசுத்த நிலையை புரிய வைப்பதற்கு ஓர் சிறந்த சந்தர்ப்பமாகும். பொறுமையாய் இருப்போம்.. இன்ஷா அல்லாஹ் வெற்றி நமக்கு நிச்சயம்.. அல்லாஹ் ஒருவனே நமக்கு போதுமனவான்...

    ReplyDelete
  15. அல்ஹம்துலில்லாஹ் ........முதலில் முபாரக் மௌலவி தெரிந்து கொள்ளட்டும்
    உலகத்தை படைத்த நாளில் இருந்து அது அழியும் நாள் வரை அல்லாஹ்
    திட்டமிட்டு இருக்கின்றான், கடைசி காலங்களில் நடக்க வேண்டியவை
    ஆரம்பித்து இருக்கின்றது. பொறுமையாக இருப்போம், தஹஜ்ஜத்தில்
    உலக முஸ்லிம் அனைவருக்கும் அழுது துவா கேட்போம்.
    இன்ஷாஅல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.