Header Ads



தமிழ் அதிகாரியின் இனவாதம் - முஸ்லிம கிராம சேவகர் விரட்டப்பட்டார்..!

(யாழ் விஷேட நிறுபர்)

யாழ்ப்பாணத்தில் 1990 களுக்குப் பின் பணியாற்றவென நீர்கொழும்பில் கடமையாற்றிய எம்.எஸ்.எம்.ஜினூஸ், யாழ் முஸ்லிம் சமூகத்தவர் பலரது வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் கடமையாற்றவென வருகை தந்திருந்தார். கடந்த 11 மாதங்களாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய ஜினூஸ் நேற்று 8-12-2012 அன்று மீண்டும் மாற்றலாகி நீர்கொழும்பிற்கு சென்றுவிட்டார். 

இது குறித்து தொடர்புடைய வட்டாரங்களுடன் கேட்டபோது அவர்களிடம் இருந்து பின்வரும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தது.

கிராம சேவையாளர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஜே 87 பகுதிக்கான கிராம உத்தியோகத்தராக நியமிக்கப்படவேண்டும் என யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்புத்தெரிவித்த யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் ஜே 86 என்னும் முஸ்லிம்கள் குறைவாக வாழும் கிராம உத்தியோகத்தர் பிரிவினை ஜினூஸ் க்கு கையளித்தார். 

குறித்த நாள் முதல் ஜினூஸ் மீது, பிரத்தியேக சட்டங்கள் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளாரால் போடப்பட்டன. எல்லா விதமான கையொப்பங்களுக்கும் பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவேண்டும். என்றும் முஸ்லிம்களின் ஆவணங்களில் விஷேட கண்காணிப்பு அவசியம் என்றும் கிராம சேவையாளர் விடுமுறை செல்வதாயின் நிர்வாக உத்தியோகத்திரடம் மாத்திரமல்ல தன்னிடமும் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் கடுமையான சட்டங்கள் ஜினூஸ் மீது அமுல்படுத்தப்பட்டன.

எனவே தனது சாதாரண கடமைகளுக்காக தான் ஒரு அடிமையினை விட கீழ்த்தரமாக நடாத்தப்படுவதை உணர்ந்த கிராம சேவையாளர், பல்வேறு சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளருடன் தன்மையாக கதைக்க முற்பட்ட வேலைகளில் பிரதேச செயலாளர் மிகவும் கடினமாக நடந்துகொண்டிருக்கின்றார். மாற்றுக் குரலில் தொலைபேசியில் உறையாடி “எங்களுக்கு அவசர உதவி தேவை எமக்குப் பெற்றுத்தர முடியுமா எனக் கேட்டுள்ளார்” அதற்கு ஜினூஸ், தான் நீர்கொழும்பில் விடுமுறையில் நிற்பதாக கூறியபோது “நான் டீ எஸ் கதைக்கின்றேன் நீர் என்ன நீர்கொழும்பில் படுத்துக்கிடவும்” எனக்கூறியுள்ளார்.

இவ்வாறாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளர் கிராம சேவையாளருடன் முறைகேடாக நடந்துள்ளமை அறியக்கிடைத்துள்ளது. இதற்காக நாம் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றினைப்பதிவது குறித்து ஆலோசித்து வருகின்றோம் என கிராம சேவையாளரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரக் காரணமாக இருந்த தரப்பினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிராம சேவையாளர் ஜினூஸ் அவர்களைத்தொடர்புகொண்டு கேட்டபோது “நான் தனிப்பட்ட காரணங்களுக்காக மாற்றலாகி செல்வதாக குறிப்பிட்டதுடன் வேறு தகவல்களை வழங்கவும் மறுத்துவிட்டார்”

1 comment:

  1. அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ ஒரு போதும் மறுதலிக்கப்பட மாட்டாது..

    ReplyDelete

Powered by Blogger.