Header Ads



யார் வந்தேறிகள்....??


30 வருடகால இறத்தக்ளறி முடிவுக்கு வந்ததை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாமல் இலங்கையின் தற்கால நிலவரம் மாறியுள்ளது . யுத்தம் முடிவுக்கு வந்ததை உலகில் அதிகமானவர்கள் வரவேற்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பாராட்டியும் மகிழ்ந்தனர். (மாமிசம் உண்டு, அதிலே ஆதாயம் தேடுபவர்கள் மட்டும் மூச்சுவிடவில்லை)

ஆனால் அவைகள் எல்லாம் கொஞ்சக் காலம்தான் என்றாகிவிட்டது.

மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட நினைத்தார்களே தவிர, நிம்மதியாக வாழ முடியவில்லை. அழுத்தங்கள் ஒரு பக்கம், விலைவாசியேற்றம் மறுக்கம், பிரிதொரு பக்கம் எல்லைப் பிரச்சனை, மற்றொரு பக்கம் குடியுரிமைப் பிரச்சனை.பேரினவாதிகள்  முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிப்பதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதை தற்கால நடைமுறைகள் வெளிக்காட்டுகிறன.

பேரினவாதம் படுபயங்கரமாக தலைவிரித்தாடுகிறது. ஒரு பக்கம் தமிழர்களை நசுக்குவதற்கு முற்பட்டாலும் மறுபுரம் முஸ்லிம்களை நசுக்குவதற்கும், நாட்டைவிட்டு ஓட்டம் காட்டுவதற்கும் முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு தீய செயலில் இறங்கியிருப்போர் குறிப்பிட்ட சிறு குழுவினரே எனக்கூறப்பட்டாலும், அடிப்படையில் பெரும்பான்மையினர் இனவாதத்திற்கு ஆதரவாக இருப்பதையும் நன்றாக உணரமுடிகிறது. அதுதான் உண்மையும் கூட.

ஏனெனில், பெரும்பாம்மையினர் இத்தீய சதி நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மையென்றால் அச் சிறுகுழுவினரை எதிர்த்து பேசாது, அவர்களுக்கு எதிர் நடவடிக்கை எடுக்காது இருப்பது ஏன்? மௌனமே சம்மதத்திற்கு அறிகுறி!!

நாளுக்கு நாள் அட்டகாசமும், அட்டூழியமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டு பெரும்பான்மையானவர்கள் கண்டும் காணாமலும் இருக்கிறார்களா?

ஒரு சிறு குழுவினரால் அமைதிக்கு களங்கம் விளைவிக்கப்படும் போது பெரும்பான்மையினர் கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது எவ்வகையில் நியாயமானதாகும்? ஒரு சிறு குழு பெரும்பான்மையினரை ஆதிக்கம் செலுத்துகிறார்களா?

முஸ்லிம் தலைமைகளோ விளங்கியும் விளங்காமலும் எதையாவது ஒன்றைச் சொல்லிவிட்டு மௌனம் சாதிக்கிறார்கள்.

சிறுகுழுக்களோ பெரும்பான்மையோ எப்படியிருப்பினும், இன்று முஸ்லிம்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதையும், முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரங்ககள் பல முனைகளில் முன்னெடுக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. ஊண்மையில் இது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

அவற்றில் ஒன்றுதான் இன்று இலங்கையில் இனவாதிகளால் முஸ்லிம்கள் 'வந்தேறிகள்' எனும் ஒரு வாதமும் பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது. கண்டதெற்கெல்லாம் முஸ்லிம்கள் வந்தேறிகள் என்று கூறுவது மட்டுமின்றி, அவர்கள் 'அறபு நாட்டுக்கு போய்விட வேண்டும்' என்றும் பௌத்த மக்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர அதிகமானவர்கள் கூறுகின்றனர். இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கெதிராகவும் போர்கொடி தூக்குவது மட்டுமன்றி, தொழுபவர்களை வட்டமிட்டு மிரட்டி, பள்ளிகளை அகற்றக்கோரியும், முஸ்லிம்களும் அவ்விடத்திலிருந்து அகன்றுவிட வேண்டும் எனவும் கோசமிடுகின்றனர்.

புரகஹதெனியவில் இரண்டு முஸ்லிம்களும், பௌத்த விகாரையில் பணிபுரியும் வேன் சாரதிக்குமிடையில் ஏற்பட்ட கைகளப்பில் அந்த வேன் சாரதி தாக்கப்பட்டாh. என அறிந்து, ஸ்தளத்திற்கு உடன் விரைந்த கிட்டத்தட்ட 15 பௌத்த சமயத் தேரர்கள், அந்த மூன்று முஸ்லிம்களோடு மட்டும் நின்றுவிடாது, தங்களது இனத்துவேசத்தை ஒட்டுமொத்தமாகக் கொட்டி, கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிங்களவர்களை விரட்டிவிட்டு (முஸ்லிம்களின் கடைகள்தான் அவர்களின் கண்களில் போடப்பட்ட கந்தல்கள் போல்)  கடைகளை நடாத்த சவூதி நாட்டுக்குச் செல்ல வேண்டியதுதானே' என்றும் இன்னும் பல மோசமான வார்த்தைகளை அள்ளியும் இறைத்திருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு இலங்கை சொந்தமில்லை, இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமுரியது எனும் கருத்து பரந்து காணப்படுவதால், உண்மையில் முஸ்லிம்கள் மட்டும்தான் வந்தேறிகளா? மற்றவர்கள் இலங்கை மண்ணிலிருந்தவாறே முளைத்தெழும்பினார்களா? என்பதை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையாகும்.

இப்போது, இது எங்கள் நாடு எனக் கோஷமிட்டு இலங்கையில் முதலில் (இவர்கள்தான் முதன்மையானவர்களா அல்லது பிந்தியவர்களா என்பதை பின்னர் பார்ப்போம்) குடியமர்ந்தவர்கள் என்பதால் பின்னர் வந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் இந்தியாவிலிருந்தும், முஸ்லிம்கள் அறபுநாடுகளிலிருந்தும் வந்து குடியமர்ந்த வந்தேறிகள் என்று சொல்லலாமா?
இல்லை, நாங்கள் அடிப்படை குடியரிமையுடையவர்கள் என்று மார்பு தட்டுபவர்களும் வந்தேறிகள்தான் என்பதை சிறுதகவல் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சித்தார்த்த எனும் இயற்பெயர் கொண்ட புத்தர் (ஞானம் பெற்றவர்) சாக்கிய வம்சத்தில் தற்போதய தெற்கத்திய நேபாளத்தில் பிறந்து – அங்கேயே வளர்ந்து அங்குள்ள வனாந்திரங்களில் தனக்கு ஞானம் கிடைக்கும் வரை அலைந்து திரிந்து, தியானத் தில் இருந்து, பின்பு (பௌத்த மதக் கொள்கைப்படி) ஞானம் கிடைத்த பின்பு தன்னைச் சூழவுள்ள பகுதிகளுக்குச் சென்று தான் உணர்ந்தவைகளை மக்களுக்குப் போதிக்கிறார். அதனை பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இன்னும் ஆழமாகச் சொல்வதென்றால், தில்லியிலிருந்து கிழக்கு வங்காளம் வரை பயணம் மேற்கொண்டு தான் உணர்ந்ததை கற்றுக் கொடுத்தார்.

தன்னைச் சூழவுள்ள பகுதிகளில் தனது கொள்கையைப் பரப்பிவிட்டு இறுதியில், இந்தியாவின் குசி நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள குசிநாரா எனும் இடத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்து அங்கேயே மரணம் எய்துகிறார்.

இன்று பௌத்தர்கள் என்றும், மகான் புத்தரை வழிபடுபவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு கடும் போக்காளர்களாக இருப்பதானது மகான் புத்தரின் செயலுக்கு மாற்றமானதாகும். சாந்தமான போக்குடையவராக, தான் சொல்லும் கருத்தொன்று செயலொன்று என்றில்லாது கருத்துக்கு ஏற்றது போல் செயல் இருந்ததால், அவர் சொல்லும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அதிகமானவர்கள் அவர் பக்கம் திரும்பினர். அவர் இனத்தைப் பார்க்கவில்லை, தனக்கு மக்கள் தலை சாய்க்க வேண்டும் என எதிர் பார்க்கவில்லை, சண்டைகளுக்குச் செல்லவில்லை, எல்லா மக்களையும் சமமாக நினைத்து, சாதி மதம் பாராது பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அன்னவரை மக்கள் பின்தொடர்ந்தனர்.

இலங்கையில் யார் மூலம் பௌத்தம் பரவியதோ அந்த அஷோக மன்னர் கொடுங்கோலனாகத்தான் இருந்தார். பின்பு பௌத்தத்தை தழுவியதும் அவர் முந்திய தன்மைகளைவிட்டு மகான் புத்தரின் கொள்கைகளை ஏற்று, அக்கொள்கைகளை பரப்பும் ஒருவராக மாறியது மட்டுமல்லாது தனது மக்களையும் அதில் இனைத்து பௌத்தத்தைப் பரப்புபவர்களாக மாற்றினார் என்றால், அவர்கள் பௌத்த மதத்தை விரும்பினர். புத்தரை கௌரவித்தனர், அவர் சொல்லுக்கு மதிப்பளித்தனர்.

கி.மு. 4ம் நூற்றாண்டளவில் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தவர்தான் அசோகர் எனும் மன்னன். இவர் பௌத்தத்தைத் தழுவி, பல இடங்களுக்கும் பௌத்தம் போய்ச்சேர வழிஅமைக்கிறார். அதில் தனது மகன் மகிந்தயை இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார்.

மகிந்தை இலங்கைக்கு வந்து அன்று இருந்த அரசனை சந்தித்து பௌத்தத்தை ஏற்க வைத்து இலங்கையில் அம்மதம் பரவுவதற்கு வழிஅமைத்துக்கொடுத்ததாக வரலாறு சொல்கிறது.

அஷோக மன்னரின் மகன் இலங்கைக்கு வரும் போது, அங்கு பூர்வீகக் குடிகளாக 'இயக்கர்கள்' என்று ஒரு சமுதாயம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கிடையில்தான் இந்தியாவிலிருந்து வந்த பௌத்தம் பரவுகிறது.
எனவே, இலங்கையில் பௌத்தம் அதுவே தானாக முளைத்தெழும்பவில்லை. முதன் முதலாக பௌத்த மக்கள் குடியமரவுமில்லை எனும் போது அது பௌத்த நாடாகவே உருப்பெற்றது எனக் கூறமுடியாது.

எனவே, முஸ்லிம்கள் அறபு நாட்டிலிருந்து வந்தது போல் பௌத்தர்கள் இந்தியாவிலிருந்து வந்தார்கள்.

ஆக மொத்ததத்தில் நாம் எல்லோருமே வந்தேறிகள்தான்.


No comments

Powered by Blogger.