தங்கத்தை தனது மலவாயினுள் மறைத்து வைத்து இந்தியா செல்லவிருந்த பயனி வசமாக மாட்டினார்.
(எஸ்.எல். மன்சூர்)
இன்று (30.01.2013)மாலையில் இந்தியா செல்லவிருந்த விமானத்தில் விமானப் பயனி ஒருவர் சுமார் 128 கிராம் தங்கக்காசிகளை தனது மலவாயினுள் மறைத்து வைத்து யாருக்கும் தெரியாதவாறு செல்லவிருந்த நேரத்தில் இலங்கை விமானநிலையச் சுங்க அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டார். இது பற்றி தெரியவருவதாவது,,
இலங்கையிலிருந்து இந்தியா செல்லவிருந்த விமானத்தில் சுமார் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான தங்கக் காசிகளை தனது மலவாயினுள் யாருக்கும் தெரியாவாறு ஒழித்து வைத்திருந்தார். அப்போது அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட விமானநிலையத்தில் கடமையிலிருந்த சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது வசமாக மாட்டிக் கொண்டார். மேலும் இவரின் உடம்பிலிருந்து தெரியாமல் ஒழித்து வைத்திருந்த 2500 யூரோ நாணயங்கள் (இலங்கை பெறுமதி சுமார் ரூபா 4இலட்சம்) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடாத்தப்படுவதாக தற்போது விமானநிலையத்தில் கடமையிலிருக்கும் சுங்கத் திணைக்களத்தின் சுங்க அத்தியட்சகர் சட்டத்தரணி எஸ். நியாஸ் தெரிவித்தார்.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் இதேபோன்று இந்தியாவின் மும்பாய் செல்லவிருந்த விமானப் பயனி ஒருவர் இதேபாணியைப் பின்பற்றி சுமார் 600 கிராம் நிறையுடைய தங்கக் காசுகளை கடத்த முயன்றதாகவும் சந்தேசகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரை விசேடமாகப் பரிசோதித்தபோது மலவாயினுள் தங்கக் காசுகள் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 36இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்தத் தங்கக் காசுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் ஒருஇலட்சம் ரூபா அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டார் எனவும் சுங்க அத்தியட்சகர் எஸ். நியாஸ் யாழ்முஸ்லீம் வெப்தளத்திற்குத் சற்று முன்னர் தெரிவித்தார்.
Post a Comment