திருகோணமலையில் தேசிய மீலாத் விழா
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2013 ஆம் ஆண்டின் தேசிய மீலாத் விழாவினை இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மாணித்தள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் இதன்போது தேசிய மட்டத்தில் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மீலாத் போட்டிகளில் பங்குபற்றி முதல் இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்படவிருப்பதாகவும் , மீலாத் நிகழ்வை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரபு மத்ரஸாக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
Post a Comment