ஒபாமாவின் அண்ணருக்கு அரசியல் ஆசை
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டை சேர்ந்தவர். அவருக்கு ஒபாமா தாயார் உள்பட 4 மனைவிகள். இதில் ஒரு மனைவிக்கு பிரிந்தவர் மாலிக் ஒபாமா (வயது 54). இவர் கென்யா நாட்டில் வசித்து வருகிறார்.
ஒரு நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். தனது தம்பி அமெரிக்காவில் அதிபர் ஆகி இருப்பதால் இவருக்கும் அரசியல் ஆசை வந்துள்ளது. எனவே அவர் கென்யா தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்.
கென்யாவில் சியாவா மாகாண தேர்தல் அடுத்த வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அவர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரை எதிர்த்து கென்யா பிரதமர் நெய்லாரவுடின்கோவின் தம்பி போட்டியிட உள்ளார். அதிபர் ஒபாமாவுக்கு கென்யாவிலும் செல்வாக்கு உள்ளது. எனவே எனக்கு ஓட்டு போட்டு மக்கள் தேர்வு செய்வார்கள் என்று மாலிக் ஒபாமா கூறினார்.
Post a Comment