Header Ads



ஒபாமாவின் பணிப்பில் சிறப்பு அமெரிக்கா குழு இலங்கை வருகிறது


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பணிப்பின் பேரில், மூன்று பேர் கொண்ட அமெரிக்காவின் உயர்மட்டக் குழு அடுத்தடுத்த வாரங்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

இலங்கையின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவியில் அடுத்து நீக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்கு உயர் மட்டக்குழுவை அனுப்பும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இலங்கை வரவுள்ள இந்த உயர்மட்டக் குழுவில், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக்கின் கீழ் பணியாற்றும், பிரதி உதவிச்செயலர்கள் மூவர் இடம்பெறவுள்ளனர். 

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கான, பின்புல் நிலைமைகளை ஆய்வு செய்வதே இந்தக் குழுவின் பிரதான நோக்கம்” என்று அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு மற்றும் மனிதஉரிமைகள் நிலை குறித்தும் இந்தக் குழு கடுமையாக கண்காணிக்கவுள்ளது.  அவர்கள், ஜனநாயகம், மனிதஉரிமைகள், நல்லாட்சி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள ‘விக்கல்கள்‘ குறித்தே அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்தக் குழு தமது பயணத்தை அடுத்து சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் அடிப்படையில் தான், எதிர்காலத்தில் இலங்கையை எவ்வாறு அணுகுவது என்று முடிவு செய்யவும் ஒபாமா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.