அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் மறுபக்கம்..!
(Tn) அமெரிக்க இராணுவத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பதவி நீக்கப்பட்ட கட்டளை தளபதிகளுள் 30 வீதமானோர் பாலியல் குற்றச்சாட்டுக்காகவே வெளியேற்றப்பட்டுள்ளது அந்நாட்டு பாதுகாப்பு திணைக்கள தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதில் கற்பழிப்பு, முறையற்ற உறவு, பாலியல் தொந்தரவு ஆகிய குற்றச்சாட்டுகளும் உள்ளடங்குகின்றன.
இந்த தரவுகள் மூலம் அமெரிக்க இராணுவ தலைவர்கள் பாலியல், மது மற்றும் போதைப் பொருள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பது தெரியவந்தது. இராணுவத்தில் இருக்கும் லுதினன் கேனல் அல்லது அதற்கு மேலான அதிகாரிகளில் 10 இல் நான்கிற்கும் அதிகமானோர் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ஒழுக்கப் பிரச்சினையால் பதவி விலக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக் காலத்தில் ஒரு நட்சத்திரம் முதல் நான்கு நட்சத்திரங்கள் கொண்ட 18 ஜெனரல் மற்றும் அட்மிரல்கள் பதவி விலக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு காரணமாகவே தமது பதவியை இழந்துள்ளனர். இதில் 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 255 கட்டளைத் தளபதிகள் பதவி விலக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 78 பேர் பாலியல் விவகாரத்தில் சிக்கியே தமது வேலையை இழந்துள்ளனர். அண்மையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் டேவிட் பெட்ரசும் தனது பதவியை இழந்தமை குறிப்பிடத் தக்கது.
Post a Comment