வெள்ளத்தினால் பாதிப்படைந்த சிங்கள மக்களுக்கு முஸ்லிம்களின் மனிதாபிமான உதவி (படங்கள்)
(Iqbal Ali)
கடந்த நாட்களில் குருணாகல் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக இந்துல்கொடகந்த, வல்பொலகந்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் பல வீடுகள் பாதிப்புக்குள்ளாயின இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மீன்டும் குடியேறுவதற்கு மண்சரிவு அச்சுறுத்தல் நிலவுவதால், வல்பொலகந்த உப்போசத்தா ராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காளிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குறிய உணவு பற்றாக்குறை சம்பந்தமாக கைத்தாழில் வணிகத்துறை பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத், குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததின் பேரில் குருணாகல் பஸார் ஜும்ஆப்பள்ளி வாசல் நிர்வாக சபை ஏற்பாட்டில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உளர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
வல்பொலகந்த உப்போசத்தா ராமய பிரதம தேரர் மகாமித்தவ மஹநாம ஹிமி அவர்களின் முன்னிலையில் பொருட்கள் வழங்கபப்படுதைக் காணலாம் இந்த நிகழ்வில் குருணாகல் பஸார் ஜும்ஆப்பள்ளி வாசல் நிர்வாக சபையின் உறுப்பினரகளான அல்ஹாஜ் ரயீஸ் அவர்களும் அல்ஹாஜ் அஸாம் அவர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment