Header Ads



புல்மோட்டை ஜம்மியதுல் உலமா பொதுச் செயலாளர் மீது தாக்குதல்


திருகோணமலை புல்மோட்டை கிளை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர், குச்சவெளி மத்தியஸ்த சபையின் உப தலைவர், குச்சவெளி காழி நீதி மன்றத்தின் பிரதான (ஜூடி) அங்கத்தவர் மற்றும் புல்மோட்டை மத்திய மகா வித்தியாலயத்தின் பட்டதாரி ஆசிரியருமான அஷ்ஷெய்ஹ் எஸ்.எச்.ஸாலிஹீன் (நளீமி) நேற்றிரவு 10.30 மணியளவில் அவரது வீடு செல்லும் பாதையில்வைத்து இனம்தெரியாத காடையர்களால் தாக்கப்பட்டு புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் (Itu) சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளானவரால் சந்தேகத்தில் போரில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் மேலதிக விசாரனைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் - முன்னோடி


2 comments:

  1. அண்மையில் திருகோணமலை சாஹிரா கல்லூரியிலிருந்து மாற்றம் பெற்று புல்மோட்டை பாடசாலைக்கு மாற்றம் பெற்று சென்ற ஆசிரியர் ஆரிபீன் அவர்களும் இதேபோன்று காடையர் கும்பலினால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ..

    ReplyDelete
  2. சகோதரர் ரியாஸ் முகம்மது அவர்களின் தகவலில் புல்மோட்டையில் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் ஆரிபீன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் ஆரிப் (தமிழ் பாட ஆசிரியர்)அவர்களே அன்றி ஆரிபீன் என்பவரல்ல.புல்மோட்டை மகா வித்தியாலயத்தில் ஆரிபீன் என்ற பெயரில் நிலாவெளியைச் சேர்ந்த நபரொருவர் ஆசிரியாராக கடமையாற்றியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



    ReplyDelete

Powered by Blogger.