பொலனறுவையில் வீழ்ந்த நுண்ணங்கிகள் + வால் நட்சத்திரத்தில் உயிரினங்கள் (வீடியோ)
பொலனறுவை - அரலஹங்வில பகுதியில் கடந்த 29ஆம் திகதி வானிலிருந்து வீழ்ந்த எரிகல் துணிக்கைகளில் அல்கா நுண்ணங்கிகள் உள்ளமை தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் காடிஃப் பல்கலைக்கழக இரசாயனக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வானசாஸ்திரவியல் நிபுணர் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்கமைய, பூமிக்கு அப்பால் உயிரினம் காணப்படுவதற்கான சர்வதேச ரீதியான முதலாவது தடயம் கிடைத்துள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த எரிகற்களிலிருந்த Dayatam என்ற ஒரு வகை பாஷாணம் பூமியுடன் கலந்துள்ள ஒரு பொருள் அல்லவென உறுதிப்படுத்த முடியும் எனவும் பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாக எரிகல் பாகங்கள் அடிப்படை ரீதியில் வால் நட்சத்திரம் ஒன்றிலிருந்து வந்திருக்கலாம் எனவும், அது நுண்ணங்கிகள் அடங்கிய ஒரு பொருளாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பல மில்லியன் வருடங்களாக சூரியனைச்சுற்றி வலம்வந்துள்ள நிலையில் சமுத்திர நீர் வற்றியதை அடுத்து, இந்த நுண்ணங்கிகள் செயலிழந்து போயிருக்கலாம் என பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்க கருதுகின்றார்.
இதன்பிரகாரம் பொலனறுவையில் கண்டுபிடிக்கப்பட்ட எரிகல் பாகங்கள் மூலம் விண்வெளியில் காணப்படுகின்ற வால் நட்சத்திரத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், வால் நட்சத்திரத்தில் இருந்தே பூமிக்கு உயிரினங்கள் வந்திருக்கலாம் எனவும் புவி சித்தாந்தங்களுக்கு இதுவொரு வலுவான தடயமாக அமைந்துள்ளது என்றும் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வான சாஸ்திரவியல் நிபுணரான பேராசிரியர் சந்த்ரா விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுபஹானல்லாஹ்.
ReplyDelete