Header Ads



சர்வதேச கிராத் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு கிண்ணியாவில் கௌரவம்



(அபூ அஹ்ராஸ்)

83 நாடுகளைச் சேர்ந்த கிராத் போட்டியாளர்களுக்கு மத்தியில் அல்குர்ஆன் பாராயனம் செய்ததில் வெற்றி பெற்ற இலங்கை மாணவன் றிப்தி முகம்மது றிஸ்கானை சைகா நிறுவனத்தின்; தலைவரும் கிண்ணியா நகரசபை தவிசாளருமான டொக்டர் ஹில்மி மஹ்ரூப் பாராட்டி பரிசில் வழங்கி கௌரவித்துள்ளார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியா நடத்தப்பட்ட கிராத் போட்டியில் வெற்றி பெற்று தெரிவாகி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவியுடன் சவூதி அரேபியாவில் 83 நாட்டுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட அல்குர்ஆன் மனன கிராத் போட்டியில் முதலாமிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவன் றிப்தி முகம்மது றிஸ்கானை தனது இல்லத்திற்கு அழைத்த கிண்ணியா நகரசபை தவிசாளர் தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி பாராட்டுதலையும் நினைவுப் பரிசினையும் வழங்கிவைத்தார்.

இப்பாராட்டு கௌரவிப்பு நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எம்.எம. சமீல், கிழக்கு மாகாண முஸ்லிம் சமய கலாச்சார பிராந்திய பொறுப்பாளர் ஏ.எல். ஜூனைட்;, சைகா நிறுவனத்தின் செயலாளர் எம்.ஐ, நிஜாம்தீன் வெற்றி பெற்ற மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் அதிகாரிகள் மற்றும் சைகா தன்னார்வ நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் இதன் போது பிரசன்னமாயிருந்தனர்.







No comments

Powered by Blogger.