Header Ads



'வறுமையற்ற இலங்கை தேசம் நிறைவான இல்லம்' ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மாநாடு



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் நிறைவான இல்லம் -வளமான தாயகம்  எனும் தொனிப் பொருளிலான விசேட அறிவூட்டல் மகாநாடு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் 15-01-2013 திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு -காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,திவிநெகும பட்டதாரிகள் ,சமுர்த்தி பெறும் பயனாளிகள் ,கிராம மட்டத் தலைவர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு  இது தொடர்பாக விழிப்பூட்டப்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,காத்தான்குடி  நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் றமீஸா ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பு செயலாளர் றுஸ்வின்,காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி சுபைர்,காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர் சுல்மி உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.





2 comments:

  1. அமைச்சர்கள் நம்மை விழிப்பூட்டிய பின் அவர்கள் தூங்க்கப்போகின்றனரா?

    ReplyDelete
  2. எனக்கொரு டவுட் சார்!

    முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் வளர்ந்தவர்கள் எல்லோரும் ஏன் தாறு மாறாக அறிக்கை விடுகிறீர்கள் ?

    அறிக்கை விட்டாலும் ஓகே, ஆனா ஏன் சார் எல்லோரும் ஒரு புளோ வில கதைகிறீர்கள்.

    வடிவேலு கேட்பானே,
    ஏ...........ன் ?
    எதற்.....காக ?
    என்று கேட்க தோன்றுகிறது.

    வறுமை அற்ற இலங்கையை பிறகு பார்ப்போம்,
    முதலில் காத்தான்குடியில் ஒரு வறுமை அற்ற நகர் பிரிவு அல்லது கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றை உருவாக்குங்க.

    சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் என்றால்,

    சும்மா "சிறுவன்" மாதிரி சின்ன புள்ள தனமா பேசாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.