ஜத்தாவில் நடமாடும் (மொபைல்) பள்ளிவாசல் (படங்கள் இணைப்பு)
ஜித்தாவில் செயல்பட்டுவரும் இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.
படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள'கார்னிச் பீச்' என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும்.
இந்தப் பள்ளி வாசலின் முக்கிய நோக்கம். அசர், மஃரிப், இஷா தொழுகைகளை சிலர் இதுபோன்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு செல்லும் போது வஃக்துக்கு தொழ இயலாமல் தொழுகையை இழக்க நேரிடும் அவ்வாறான சூழல்களில் இந்தப் பள்ளிவாசல் வஃக்துக்கு தொழுகையை நிறைவேற்ற உதவி புரிகின்றது.
இதன் வசதிகள்
ஒரு பள்ளி வாசலில் இருக்கும் பாங்கு சொல்ல மைக் ஸ்பீக்கர்.. உளூ செய்ய தண்ணீர், முஸல்லாக்கள், நூற்றுக்கணக்கனோர் நின்று தொழும் வகையில் விரிப்புகள் இன்னும் பள்ளிவாசலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. மேலும் இதற்குள் கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பள்ளிவாசலை, ஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகன சேவையைப் போல், மறுமைக்கு முக்கிய காரணியான தொழுகையை நிறைவேற்ற இதுபோன்ற மொபைல் பள்ளி வாசல்களுக்கும் நம் சமுதாய அமைப்பினர் முயற்சி செய்யலாம்.
Post a Comment