மாலியில் முஸ்லிம் போராளிகள் முன்னேறுகிறார்கள் - பிரான்ஸ் படைகள் எதிர்த் தாக்குதல்
ஆப்பிரிக்க நாடான மாலி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் அல்கொய்தாகள் உதவியுடன் மாலியின் வடக்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டனர். இந்த நிலையில், தென் பகுதியில் உள்ள கோன்னா நகரையும் நேற்று கைப்பற்றினர். அப்போது நடந்த சண்டையில் ராணுவம் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, தங்களுக்கு உதவும்படி பிரான்சை மாலி அரசு கேட்டுக் கொண்டது. அதை தொடர்ந்து பிரான்ஸ் விமானப்படை விரைந்து வந்து கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீச்சு நடத்தியது.
கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து அந்த நகரம் மீட்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அல் கொய்தாகளும் உதவி வருகின்றனர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, நாடு முழுவதும், 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாலியின் இடைக்கால அதிபர் டயன் கவுன்டா டிராஞர் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து டெலிவிஷனில் உரை ஆற்றிய அவர் ஒவ்வொரு மாலியரும் நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். நாம் அமைதியை விரும்புகிறோம். ஆனால், நம் மீது போர் திணிக்கப்பட்டது. இருந்தாலும் எதிரிகளை நசுக்கி விட்டோம் என்றார்.
Post a Comment