Header Ads



வாகனப் புகைப்பரிசோதனை நிலையங்களில் நடைபெறும் லஞ்ச ஊழல் மோசடிகள்...!



(முஹம்மது நியாஸ்)
  
நாட்டின் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மோட்டார் வாகனப்போக்குவரத்துத் திணைக்களத்தினால் சகல வாகனங்களுக்குமான புகைக்கசிவுப்பரிசோதனை என்னும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்பரிசோதனை மூலம் வீதியால் பயணிப்பதற்கு ஏற்ற முறையில் மற்றும் வாகனத்தை செலுத்தும் சாரதிக்கு உடலுக்கு ஊறு விளைவிக்காத வகையில் வாகனத்தின் தகுதி உள்ளதா என்பதனைக் கண்டறிந்து அதன் பிறகே வாகன அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
 இம்முறை தற்போது நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நடைபெற்று வருகின்றது.

 கடந்த சில மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு,நாவற்குடா,வாளைச்சேனை போன்ற இடங்களில் அமைந்துள்ள இப்புகைப்பரிசோதனை செய்யும் நிலையங்களில் பாரியளவில் லஞ்ச,ஊழல் மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அறிய முடிகிறது.

சாதாரணமாக மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு புகைப்பரிசோதனை செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூபா 415.00 ஆகும்.அது போன்று ஒவ்வொரு வாகனங்களுக்கேற்ப இக்கட்டணத்தொகை வேறுபடுகின்றது.

ஆனால் புகைப்பரிசோதனைக்காக வாகனங்களைக் கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்களிடம் வாகனங்களின் திறன் குறைவாகவுள்ளதாகவும்,அவ்வாறிருக்கும் வாகனத்திற்கு தகுதிச் சான்றிதழ் வழங்குவதாயின் கட்டணத்தொகையோடு மேலதிகமாக தமக்குப் பணம் தரவேண்டுமென்றும் இப்பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனத்தின் ஊழியர்கள் இருநூறு ரூபா தொடக்கம் ஆயிரம் ரூபா வரையில் பொது மக்களிடமிருந்து பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.

வீதியால் பயணிப்பதற்கு தகுதியான சிறந்த முறையில் இருக்கும் வாகனங்களுக்குக் கூட சில போலியான காரணங்களைக் கூறி இவ்வாறான ஊழல்கள் இடம்பெறுகின்றன.வாகன உரிமையாளர்களும் வாகன அனுமதிப்பத்திரத்தினை உடனடியாக குறித்த திகதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்கள் கேட்கும் தொகையினை கொடுத்து விட்டு வந்து விடுவதாக ஏராளமான வாகன உரிமையாளர்கள் அங்கலாய்கின்றனர்.

இதன் மூலம் சாதரணமாக ஒரு மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவருக்கு புகைப்பரிசோதனைக்காக லஞ்சமாகக் கொடுக்கும் தொகையுடன் சேர்த்து சுமார் ஆயிரம் ரூபா வரையில் செலுத்தியே இப்புகைக்கசிவுப்பரிசோதனையினை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

வாகனங்களின் மூலம் கசிகின்ற புகையினால் சுற்றுச்சூழல் மாசடைகின்ற காரணத்தை மையமாக வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட இப்புகைக்கசிவுப்பரிசோதனை மூலம் நாடு முழுவதும் லஞ்ச ஊழல் மூலம் வயிறு நிரப்புகின்ற முதலைகளுக்கு களம் அமைந்திருப்பது கண்டிக்கப்பட் வேண்டியதே.
 இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுப்பர்களா?

1 comment:

  1. illai illai illai illai-emathu nattin aarampam ennevenru sartru josiungal.innaikku satharana pirappu urimai paththiraththai pertrukkolla 1 copy ku 100/- seluththa vendum.

    sahala eadpadum vasool rajakkalin nokkam than.

    vilangum enru ninaikkinran

    ReplyDelete

Powered by Blogger.