இலங்கைக்கான அமெரிக்க உதவிகள் குறைக்கப்படுமா..?
தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பதவிநீக்க விவகாரத்தினால், இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், இலங்கைக்கான உதவிகளில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தற்போது உடனடியாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
புதிய தலைமைநீதியரசர் பதவியேற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் உதவிகளில் அது தாக்கத்தை எற்படுத்துமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட்,இலங்கைக்கான கடந்த ஆண்டில், இருதரப்பு உதவித்திட்டத்தின் சமாதானம், மனிதஉரிமைகள், பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயக திட்டங்களுக்காக, 13.3 மில்லியன் டொலர் உள்ளிட்ட 27 மில்லியன் டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த ஆண்டில் இருதரப்பு உதவித்திட்டத்தின் 16.5 மில்லியன் ரூபாவுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான தமது உதவிகளில் இந்த நடவடிக்கை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உடனடியாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
தலைமை நீதியரசர் மீதான நடவடிக்கை தொடர்பாக இலங்கை அரசிடம் இருந்து விளக்கங்கள் ஏதும் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தொடர்ந்தும் தாம் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இலங்கை அரசின் விளக்கங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில், திருப்திகரமானதாக உள்ளது என்று கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment