உலகிலேயே பாதுகாப்பான விமான பயண சேவை வழங்கும் நிறுவனங்கள் எவை..?
உலகிலேயே பாதுகாப்பான விமான பயண சேவை வழங்கும் நிறுவனங்கள் எவை என்று நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்திற்கு 58வது இடம் கிடைத்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஜெட் ஏர்லைனர் கிராஷ் டேட்டா இவாலுவேசன் சென்டர் என்ற அமைப்பு உலகில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் நடத்தும் விமான சேவையில், எந்த விமானத்தில் பயணம் செய்வது பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை கொடுத்துள்ளது என்ற பட்டியலை வெளிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பின்லாந்த் நாட்டின் 'பின் ஏர்' நிறுவனம் பெற்றுள்ளது. இது உலகின் பழமையான ஐந்தாவது விமான சேவை நிறுவனம் ஆகும். கடந்த 1963ம் ஆண்டில் இருந்து இதுவரை உயிர்இழப்பு ஏற்படுத்தும் வகையிலான விபத்துகள் ஏதும் நிகழவில்லை. இந்த தர வரிசையில் கடைசி இடமான 60வது இடத்தை சீனாவின் சீனா ஏர் லைன்ஸ் பிடித்துள்ளது.
இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்திற்கு 58வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் நடந்த விபத்துக்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. தர வரிசையில் முதல் 20 இடத்தில் அமெரிக்க மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து ஒரு விமான சேவை கூட இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்கடோ .....
ReplyDeleteநம்ம மிகின் லங்காவும்,ஸ்ரீ லங்கன் எயார்லைன்சும் என்ன பறந்திட்டோ?
அதுல போய் வந்தவன் சொல்கிறான்
ரஜனி : சும்மா அதிருதுல ..
வடிவேலு : டிரைவர் உருட்டு வை வை வையாம் இல்ல ..
கவுண்டமணி : சும்மா தூக்கி வாரிப்போடுதுங்கோ..
கடைசியா பயலட்(என்னத்த கண்ணையா)கேக்கிறான் தம்பிபிபி இப்பபபப போவமா ?????????????