பாட்டில் தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது - ஆய்வில் தகவல்
பாட்டில் தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாவது,,
பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடி நீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் பாட்டில் தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின் "மினரல் வாட்டர்' எனப்படும் பாட்டில் தண்ணீரில் இல்லை. பாட்டில் தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும்.
இல்லாவிட்டால் நோய்த் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. ஒரே பாட்டில் தண்ணீரை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தும்போது அவர்களது கைகள், முகத்திலிருந்து பாக்டீரியாக்கள் பரவும். மேலும் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டவுடன் பயன்பாட்டுக்கு வந்துவிடுவதில்லை. அவை விற்பனைக்கு வருவதற்கு முன்பு சில மாதங்கள் வரை தொழிற்சாலைகளிலோ, விற்பனையகங்களிலோ கிடப்பில் இருக்கும்.
ஆனால் குழாய் நீர் அப்படியல்ல; குழாயில் வரும் குடிநீர் அளவில் அதிகமாகவும் விலையில் குறைவாகவும் இருப்பதால் அது பாட்டில் தண்ணீரை விட ஏதோ ஒருவிதத்தில் தரமற்றதாக இருக்கும் என மக்கள் தவறான எண்ணத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட 40 லட்சம் லிட்டர் குழாய் நீரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவை 99.96 சதவீதம் தரம் உறுதி செய்யப்பட்டாதக இருந்தது என குடி நீர் பாதுகாப்பு வாரியத்தின் ஆணையர் சூ பெனிசன் தெரிவித்துள்ளார்
Post a Comment