மௌலவிமார்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தால்..!
எமது கட்சியைச் சேர்ந்த மௌலவிமார் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சமகால பிரச்சினைகளான ஷரீயா சட்டம், பௌத்த மதகுருமாரின் இனவாத பேச்சுக்கள் போன்றவற்றுக்கு சரியான பதில் தர முடியாத இன்றைய இழிவு நிலை சமூகத்துக்கு ஏட்பட்டிருக்காது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் நடை பெற்ற கட்சி ஆதரவாளர் கூட்டத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் தெரிவித்ததாவது,
பௌத்த சமய தலைவர்களோடு சரிசமமாக அமர்ந்து பேசக்கூடிய தகுதி முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை உலமாக்களுக்கு மட்டுமே உண்டு. தம்மோடு நேருக்கு நேர் அமர்ந்து பேசக்கூடிய தகுதி இன்னொரு சமய தலைவருக்கே உண்டு என்பதை பௌத்த குருமாரும் அவர்களது சமூகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஒரு முஸ்லிம் அரசியல்வாதி, அவர் பாராளுமன்ற உறுப்பனராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி பௌத்த குருமாரைக்கண்டவுடன் எழுந்து நிற்க வேண்டிய சட்டத்தில் எழுதப்படாத சட்டத்தை நாம் கண்டு வருகிறோம். அவர்களைக்கண்டால் முஸ்லிம் கட்சித்தலைவர்கள் கூட கூணி குறுகி கும்பிடு போடுகின்ற நிலையை பரவலாக காண்கிறோம். ஆனால் சுயநலமற்ற உலமாக்கள் இவ்வாறு செய்வதுமில்லை, அவ்வாறு செய்ய வேண்டுமென்று பௌத்த மத குருமார் எதிர் பார்ப்பதுமில்லை. இது விடயத்தில் அவர்களின் பெருந்தன்மையை பாராட்டத்தான் வேண்டும்.
நாம் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் எமது அரசியல் ரீதியிலான பல சந்திப்புகளின் போது பௌத்த குருமார்கள் தமது கையை எமக்கு நீட்டி கைகுலுக்கிக்கொள்ளும் நல்ல தன்மையை அவர்களிடம் கண்டுள்ளோம். ஆனால் இவ்வாறு அவர்கள் ஏனையவர்களுக்கு அவர் முஸ்லிம் அமைச்சராக இருந்தாலும் செய்ய மாட்டார்கள்.
இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள பேரினவாதத்துக்கு பயந்து போயிருக்கும் நிலை வருமென்று நாம் எப்போதோ சமூகத்துக்கு எடுத்துக்கூறி எதிர்காலத்தில் நாம் முகம் கொடுக்கப்போகும் பிரச்சினைகளை சரியாக எடுத்துப் பேசும் ஆற்றலும், தகுதியும் உலமா கட்சியின் மௌலவிமார்களுக்கே உண்டு என்பதால் அக்கட்சியை பலப்படுத்தும்படி கூறி வந்துள்ளோம். ஆனால் சமூகமோ சிந்திக்கும் ஆற்றலை ஓரமாக வைத்துவிட்டு பணத்துக்கும் போலித்தனமான வெறும் உணர்வுகளுக்கும் இடம் கொடுத்ததால் இஸ்லாம் தெரியாத லேபல்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து விட்டு இன்று வானத்தைப்பார்த்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறது.
நாங்கள் பாராளுமன்றத்துக்கு பிரித்தானிய ஆட்சிக்கால சட்டம் படித்த சட்டத்தரணிகளை அனுப்பினோம். நல்ல தரமான வியாபாரிகளை அனுப்பினோம். பாடசாலை வாத்தியாரை அனுப்பினோம். ஒரு தகுதியுமே இல்லாதவர்களையும் அனுப்பினோம். ஆனால் மார்க்கமும் அரசியலும் கற்ற மௌலவிமாரை மட்டும் அனுப்பத்தவறி விட்டோம். இதன் காரணமாக இன்று நமது சமூகமும், சமயமும் நையாண்டி பண்ணப்படும்போது நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது திருவாய் மலர்ந்தருள மாட்டார்களா என ஏங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலைகர்கான முழு பொறுப்பையும் முஸ்லிம் சமூகமே எற்பதோடு இனியும் இத்தவறை செய்யாமலிருக்க வழி தேட வேண்டும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
மௌலவிகள் முடியுமென்றால் நமது சமூகத்தை ஒன்று சேர்த்துக்கட்டுங்கள், இதர சமூகத்தோடு பழகுவதை பிறகு பார்ப்போம்.
ReplyDeleteஏக இறைக்கொள்கையை வைத்துகொண்டு ஏகப்பட்ட கூட்டம். இதுக்குள்ள பாராளுமன்றத்துக்கும் போகனுமா?
கிழிச்சிருப்பிங்க ...............
ReplyDeleteஎன்ன மொளலவி...
ReplyDeleteஇப்ப நீங்க சப்பை கட்டு கட்டுறயலே?
நீங்க சொல்லுறத பார்த்தா இப்ப இருக்கிறவங்க பார்லிமெண்டுக்கு 134 ம் நம்பர் பஸ்சில போறாங்களோ ?
சில ஊர் பள்ளிவாயல் சம்மேளனமும், உலமாக்களும் ஜும்மாவிற்கு பின் யாருக்கும், எந்த கட்சிக்கும் வக்குபோட வேண்டும் என்ற தீர்மானத்தை பகிரங்கமாக மக்களுக்கு (தெளிவாக)அறிவிப்பார்கள்.
பின்னர் நாங்களும் இவங்க சரியாகத்தான் முடிவு எடுத்திருப்பாங்க என எண்ணி வாக்குப்போட்டோம்.
சரி சமகால பிரச்சினைக்கு தீர்வை சொல்லாமல் சும்மா ஏன் புது பிரச்சினையை உருவாக்குறீங்க?
கிழிச்சித்தான் இருப்பீங்க
ReplyDeleteஎம்.ஜி.ஆர் பிறந்த நாளை கொண்டாட மாலை போட்ட முல்லா, முஸ்லிம் உம்மாவின் பிரச்சினை பற்றி பேசுவது ஆச்சரியம்.பன்றி நஜீசைப்பற்றி பயான் பண்ணின கததான்.
ReplyDeletearafath
நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா.....!
ReplyDelete