சட்டவிரோத சிக்கரெட் வைத்திருந்த மாலைதீவு மாணவி கொழும்பில் கைது..!
(ஜே.எம்.ஹபீஸ்)
நூற்றிற்கு நூறு வீதம் முஸ்லிம்ளைக் கொண்ட நாடுகளில் மாலைத்தீவும் ஒன்று. இலங்கையில் மாலைத் தீவு மாணவர்கள் பரவலாக கல்வி கற்று வறுகின்றனர் . குறிப்பாக சர்வதேசப் பாடசலைகள் மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் இவர்களைக்காண முடியும். முஸ்லிம்கள என இனம்காண்பதில் சிலரைப்பொருத்ருத்தவரை சற்றுகடினமாகவும் இருக்கும். இவர்களால் பலவேறு அவல நிலைகள் ஏற்படுவதும் உண்டு
காரணம் மொழி கலாச்சாரம் உடை நடை பாணை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதற்கு விதி விலக்கான சந்தாப்பங்களும் உண்டு. அப்படியான மாணவிகளில் ஒருவரின் அவலத்தைக் கீழே காணலாம்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 12 சிகரெட்டுக்களை வைத்திருந்தமைக்காக இலங்கையில் கல்விக்கற்று வரும் மாலைத்தீவு மாணவிக்கு கொழும்பு நீதிமன்றம் 5000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.
மேற்படி மாணவி கொழும்பு, 3 இல் உள்ள பெரிய கடையொன்றுக்கு அண்மையில் 12 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது, இம் மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி 'இப் பெண் சொந்த பாவனைக்காக தனது பையில் வைத்திருந்த சிகரெட்டுக்களையே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இவை சட்டவிரோத சிகரெட் அல்ல. இவர் இலங்கைக்கு வந்தபோது சுங்கப்பிரிவினர் இவரை இரண்டு சிகரெட் பெட்டிகளை எடுத்துவர அனுமதித்தனர்' என வாதிட்டார்.
Post a Comment