தொழிற் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியோருக்கும் வாய்ப்பு
(ஏ.எல்.நிப்றாஸ்)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான கற்கை நடவடிக்கைகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கான பயிலுனர் சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் இவ்வாரமும் அடுத்த வாரமும் இடம்பெறவுள்ளதால், பயிற்சிநெறிகளுக்கென விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்க தவறியவர்களும் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று பயிற்சிநெறியில் இணைந்துகொள்ள முடியும் என்று மாவட்ட அலுவலகங்கள் அறிவித்துள்ளன.
குறிப்பாக நிந்தவூரிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்தின் இன்று புதன்கிழமை முதல் நேர்முகப்பரீட்சை இடம்பெற்று வருகின்ற அதேவேளை, சம்மாந்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜனவரி 3,4ஆம் திகதிகளில் ஆட்சேர்ப்பு பணிகளில் இடம்பெறவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 42 கற்கைநெறிகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள 15 தொழிற்பயிற்சி பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் 59 பயிற்சிநெறிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்காக விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துவிட்டபோதிலும், இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 15ஆம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட பயிற்சி நிலையத்திற்கு செல்வதன் மூலம் தம்மை பதிவுசெய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment