புதிய அரசியலமைப்பை தயாரிக்கப்போகும் பௌத்த குருமார்
மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் சில அனுநாயக்க தேர்களின் தலைமையில் பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று நாட்டிற்கு புதிய அரசியல் யாப்பு [New Constitution] ஒன்றை தயாரிப்பதற்காக முன்னணி சட்டத்தரணிகள் குழு ஒன்றை நியமித்துள்ளது.
இச்சட்டத்தரணிகள் குழுவில் ஜே.சி.வெலியமுன, ஜயம்பதி விக்கிரமரத்தின, எல்மோ பெரெரா, எச்.ஜி.புஞ்சிஹேவா, ஷிரால் லக்திலக, ரவி ஜெயவர்த்தனா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 3 மாதங்களுக்கு இடையில் இக்குழு புதிய அரசியல் யாப்பை தயாரித்து முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகவலை ஐக்கிய பிக்குகள் முன்னணியின் கருத்தரங்கு ஒன்றில் ரமனாய பீட அனுநாயக்க தேரர் கெத்தம்பே ஆனந்த தேரர் வெளியிட்டார்.
புதிய அரசியல் யாப்பு திட்டத்தின் முக்கிய அம்சமாக நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடிய பிரதம மந்திரி ஒருவரைக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நாட்டுக்கு உகந்ததாகத் தயாரிக்கப்படும் புதிய அரசியல் யாப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Then no muslims are included in the above mentioned committee?
ReplyDelete