நாளை வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு
(Tm)
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வலுவற்றதாக்கியுள்ள நிலையில் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது அரசியலமைப்பை மீறுகின்ற செயற்பாடாகும். என்று சுட்டிக்காட்டியுள்ள எதிரணியினர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கடைகளை அடைத்துவிட்டு கலந்துக்கொள்ளுமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன். வேலைக்கு செல்வோர் அன்றைய தினம் வேலைக்கு செல்லாது அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக தம்முடன் கைக்கோர்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட எதிரணியைச்சேர்ந்த உறுப்பினர்களே மேற்கண்டவாறு பகிரங்க அழைப்பு விடுத்தனர்.
இவற்றில் சகலரும் கலந்துக்கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டுமாறும், வர்த்தகர்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் பங்குபற்றுமாறு எதிரணி அழைப்பு விடுத்துள்ளது.
Post a Comment