திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவளிக்காதீர் - மு.கா. விடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள திவிநெகுமே சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதுதொடர்பில் கூறியிருப்பதாவது,
மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசு சுவீகரித்துக்கொள்ளும் திவிநெகுமே சட்டமூலம் தொடர்பிலான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது வடக்கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் பாதிக்கப்படுவர். எனவேதான் நாம் முஸ்லிம் காங்கிரஸ் இச்சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டாமென கூறுகிறோம். இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் திவிநெகுமே சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க முயலக்கூடாதென தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூக கட்சிகளான முஸ்லிம் காங்கிரசும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் அச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
Rauff Hakeem da friend thana Sammantgan
ReplyDeleteஐயா...! வாக்குப் போட்ட முஸ்லிம்கள் சொல்வதையே chaiyatha இவர்கள் நீங்கள் சொல்வதையா கேட்கப் போகிறீர்கள்?
ReplyDeleteநிபந்தனையுடன் ஆதரிக்கிறோம் என்று முடிவு வரும்...!
enna condition theriuma? 2 full ministry and 4 deputy ministry. pallivasal udaiththal paravai illai.
ReplyDeleteஇவர்கள் சொல்வதொன்று செய்வதொன்று மேல் உள்ள நண்பர் சொன்னமாதிரி வாக்குப் போட்ட முஸ்லிம்களது பேச்சையே கேட்காதவர்கள் நீங்கள் சொல்வதையா கேட்கப் போகின்றார்கள். நிபந்தனையுடன் ஆதரவு அளிக்கின்றோம் என்பார்கள். தலைவர் வெளிநாடு போவாராம். செயலாளர் சொல்வாராம் இதை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்று. அதற்குள் கொஞ்ச முந்திரிக்கொட்டைகள் ஆதரவு அளித்து விடும் அதன் பிறகு செயலாளர் சொல்வார் தலைவர் வந்த பிறகு இவர்களுக்கு விசாரணை என்று பிறகு அது கிடப்பில் இவங்களும் இவர்களது சமூக அரசியலும்.
ReplyDeleteமுதலில், நாம் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை என்பதற்கு அப்பால், இந்த தமிழ் கூட்டணி என்பவர்கள் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் வாட கிழக்கில் உள்ள முஸ்லிம்களும் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்ல எந்த அருகதையும் அற்றவர்கள் என்பது எமது திடமான நம்பிக்கை. ஏனெனில், இவர்கள்தான் முன்னால் புலிகளின் தற்போதைய திரை மறை அங்கத்தவர்கள். ஆக, வட கிழக்கில் இந்த பாசிச புலிகளின் கடந்த கால அட்டகாசங்களுக்கு ஒப்பிடும்போது, அரசு பறவாயில்லை. இன்றுகூட இந்த தமிழ் கூட்டணிதான் வடக்கு முஸ்லிம்களை மீழ்குடியேற தடையாக உழ்ழவர்கள். இவர்களின் முஸ்லிம் ஆதரவு கோசம் என்பது வெறும் சந்தர்பவாத பூச்சாண்டி..... இன்னமும் புலிவேடத்தில் வேண்டுகோளே அன்றி வேறில்லை.
ReplyDelete